அவர் ஹிந்து என்பதால் சமமாக அமர்ந்து உண்ணவும் அனுமதிக்கவில்லை – பாகிஸ்தான் கிரிக்கெட்வீரர்

அவர் ஹிந்து என்பதால் சமமாக அமர்ந்து உண்ணவும் அனுமதிக்கவில்லை – பாகிஸ்தான் கிரிக்கெட்வீரர்

Share it if you like it

பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியில் ஹிந்து மதத்தை சேர்ந்த வீரரான டேனிஷ் கனேரியா (எ) தினேஷ் பிரபா விளையாடி வருகிறார். இவர் இந்து மதத்தவர் என்பதனால் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள் தவறாக நடத்தினர். மேஜையில் இருந்து உணவு எடுப்பதற்கு கூட சக வீரர்கள் அவரை தடுத்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அனில் தல்பாட்டுக்கு அடுத்து சர்வதேச அளவில் விளையாடிய 2வது இந்து வீரர் கனேரியா. சிறந்த முறையில் விளையாடியதற்காக அவருக்கு எந்த ஒரு சக வீரரிடம் இருந்தும் பாராட்டுகள் கிடைத்ததில்லை. இவ்வாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர், ”கேம் ஆன் ஹை” என்ற கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்பொழுது கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவரது இந்த பேச்சை தொடர்ந்து டேனிஷ் கனேரியா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, அக்தர் கூறியது உண்மை. இந்துவான என்னுடன் பேச கூட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் சிலர் விரும்பவில்லை. அந்த வீரர்களின் பெயர்களை நான் வெளியிடுவேன். இதுபற்றி பேச எனக்கு தைரியம் இருந்தது இல்லை. ஆனால் இப்பொழுது என்னால் முடியும் என கனேரியா கூறியுள்ளார்.


Share it if you like it