நவோதயா பள்ளிகள் தமிழகத்தைத் தவிர்த்து நாட்டின் பல இடங்களில் அமைந்துள்ளன.மாவட்ட அளவில் நடத்தப்படும் அனைத்திந்திய நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு பல்துறை திறன்களிலும் கல்வியும் விழங்கப்படுகிறது.இந்த நவோதயா பள்ளிகள் அந்தஅந்த மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும்.மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வு மூலம் ,அவர்கள் படித்த தாய்மொழியிலே 6ஆம் வகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இப்பள்ளிகளில் மும்மொழித் திட்டத்தில் பயிலும் வாய்ப்புகளும் உண்டு.
இத்தகைய பள்ளியை தமிழகத்திற்கு வரவேற்காத திராவிட கட்சியினர், பல போராட்டங்களும் பொய் பிரச்சாரங்களும் நடத்திவருகிறனர்.இந்நிலையில், நவோதயா பள்ளிகளை ஆதரித்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் தேசிய மாணவர் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் செல்வி.நிதி திரிபாதி, தேசிய செயலாளர் திரு.முத்து ராமலிங்கம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதானை சந்தித்து தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவங்குதல் போன்ற கல்வித்துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர்.