* டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றி
பின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்குவார்.
* இதில் பத்ம ஸ்ரீ விருதை 7 நபர்களும், பத்ம பூஷன் விருதை 16 நபர்களும், பத்ம விபூஷன் விருதை 7 நபர்களும் பெறுகின்றனர்.
* குடியரசு தலைவர் விருதை 24 நபர்கள் பெறுகிறார்கள்.
* வீரதீர விருதை 4 நபர்கள் பெறுகிறார்கள்.
* இந்நிலையில் பத்மவிபூஷண் விருதை இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பெறுகிறார். இவர் 2006 ல் பத்மஸ்ரீ விருதும், 2013 ல் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கண்காணிப்பாளர் திருமிகு. இராஜேஸ்வரி IPS, குடியரசுத்தலைவர் விருதை பெறுகிறார்.
* ஒடிசா காவல் கண்காணிப்பாளர் திரு. கா.சிவசுப்பிரமணி IPS, வீரதீர செயலுக்கான விருதை பெறுகிறார்.