நேர்மையாக இருந்து தமிழக மக்களுக்கு செய்தி வழங்க வேண்டிய ஊடகங்களில் ஒரு சில ஊடகங்கள் தி.மு.க-வின் அடிவருடியாக மாறி வருவது மக்களுக்கு கவலையும், வேதனையையும், ஏற்படுத்தி வருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. விடியல் ஆட்சியில் நிகழும் அட்டூழியங்கள், அடாவடிகள், தமிழகத்தில் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்லும் சட்டம் ஒழுங்கு குறித்து எல்லாம் பேசாமல். தி.மு.க-விற்கு எதிராக யாராவது பேசினால் அல்லது எழுதினால் உடனே கைது செய்து சிறையில் அடைக்கும் பாசிச போக்கை தி.மு.க அரசு மேற்கொண்டு வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நேற்றை தினம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்புகிறேன் என்னும் பெயரில் சன் டிவி-யை சேர்ந்த பத்திரிக்கையாளர் வரம்பு மீறி நடந்து கொண்டதற்கு, பா.ஜ.க தலைவர் தக்க பதிலடியை கொடுத்து உள்ளார். தமிழக பத்திரிக்கையாளர்களை பார்த்து மும்பை ரெட் லைட் மீடியா என்று கூறிய தி.மு.க எம்பி ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக இன்று வரை பொங்காமல், குணம் ஆகாத குணசேகரன் போன்றவர்களின் பேச்சை கேட்டு கொண்டு, பா.ஜ.க-வை இழிவுப்படுத்த வேண்டும், அவமதிக்க வேண்டும் என்னும் நோக்கில் செயல்படுவதை மு.க. பணியாளர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருந்து வரும் நிலையில் சன் ஊடகத்தை துவம்சம் செய்த மீம்ஸ் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.