Zomato-விற்கு உடனே குரல் கொடுத்த கனிமொழி வெற்றிமாறன், கோவிந்தராஜ், மரணத்திற்கு எப்பொழுது தான் வாய் திறப்பார்?

Zomato-விற்கு உடனே குரல் கொடுத்த கனிமொழி வெற்றிமாறன், கோவிந்தராஜ், மரணத்திற்கு எப்பொழுது தான் வாய் திறப்பார்?

Share it if you like it

தி.மு.க எப்பொழுது எல்லாம் ஆட்சியில் அமர்கிறதோ அப்பொழுது எல்லாம் மொழி உணர்வை தூண்டி அதன் மூலம் அரசியல் செய்ய முயலும் என்பது அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது. Zomato நிறுவனம் செய்த தவறுக்கு உடனே குரல் கொடுத்த கனிமொழி அவர்கள், சென்னை செனடாப் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு வெற்றிமாறன் என்பவர் கடந்த 27 -ஆம் தீக்குளித்தார். 40 சதவீதம் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவர் அண்மையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் இதற்கு தனது கருத்தை கூட தெரிவிக்காமல் மெளனம்.

கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷ் அவர்களது ஆலையில் பண்ருட்டி மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழை தொழிலாளி கோவிந்தராஜ் அவர்கள் கூலி உயர்வு கேட்டதற்காக மர்மமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது அதற்கும் வாய் திறக்காமல் கள்ள மெளனம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் தி.மு.க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், செய்யும் அட்டசாகங்கள் குறித்து எப்பொழுது தான் கனிமொழி வாய் திறப்பார்? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it