தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த நாள் முதல் இன்று வரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை ஊடகங்கள் வாயிலாகவும், பத்திரிக்கையின் வாயிலாகவும் அறிந்து கொள்ள முடியும். தி.மு.க கண்மணிகள், கழக முன்னோடிகள், அக்கட்சியின் நிர்வாகிகளில் செய்து வரும் கூத்துக்கள் மக்கள் மத்தியில் மிகப் பெரிய கோவத்தையும், சலிப்பையும் உருவாக்கி வருகிறது.
விடியல் ஆட்சியில் மக்கள் படும் துயரங்கள், இன்னல்கள், ஒருபுறம் என்றால். மக்களை பாதுகாக்கும் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலநிலை தற்பொழுது தமிழகத்தில் உருவாகி வருவதை யாரும் மறந்து விட முடியாது. திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையத்தில் பெண் காவல் ஆய்வாளர் கோமதியிடம் தி.மு.க-வை சேர்ந்த பொங்கலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரவி என்பவர் குடிபோதையில் சமீபத்தில் செய்த தகராறு.
இன்னும் 5 வருடம் நாங்கள் தான் ஆட்சியில் இருப்போம் எங்களை ஒன்று செய்ய முடியாது என மதுபிரியர் ஒருவர் காவலரிடம் செய்த அட்டூழியம். தி.மு.க-வை சேர்ந்த காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. அரசு அதிகாரிகளை செருப்பு பிஞ்சிடும் என்று ஆபாசமாக திட்டியது. என காவலர்களுக்கு மிகப் பெரிய மனஉளச்சலை தி.மு.க-வினர் வழங்கி வரும் நிலையில். அமைச்சரின் பி.ஏ-விடம் காவலர் அடிவாங்கிய சம்பவம் மீண்டும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் மோசமாகி கொண்டே செல்லும் சட்டம், ஒழுங்கால், மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால். காவல்துறையினருக்கே உரிய மரியாதை, பாதுகாப்பு, இல்லாத நிலை உருவாகி வருகிறதே என்று பலர் தங்கள் வேதனையை பகிர்ந்து வருகின்றனர்.