தீபாவளி பண்டிகை எதற்கு கொண்டாடப்படுகிறது என்று வி.சி.க கட்சியின் செய்தி தொடர்பாளர் விக்ரமன் சமீபத்தில் தெரிவித்த கருத்து மக்கள் மத்தியில் குபீர் சிரிப்பை வரவழைத்து உள்ளது.
வி.சி.க கட்சியின் செய்தி தொடர்பாளர் விக்ரமன், தீபாவளி பண்டிகை எதற்கு கொண்டாடப்படுகிறது. என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அது குறித்து பதிவு செய்து இருப்பது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை உருவாக்கியுள்ளது.
விக்ரமனின் டுவிட்டர் பதிவு.
நல்லெண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட நாளன்று அதை கொண்டாடும் வகையில் வருடந்தோறும் மக்கள் தங்கள் தலையில் அதை தேய்த்துக்கொண்டு தீபவதி நதியில் முங்கி எழுந்த நாளே பின்னாளில் ஆரியர் படையெடுப்புக்குப் பின் பல்வேறு கட்டுக் கதைகளுடன் தீபாவளி என்றாகியுள்ளது.
தோசைக்கு புது விளக்கம் கொடுத்து இன்று வரை மக்களால் கிண்டல், செய்யப்படும் மதிமாறனுக்கே கடும் போட்டியை தரும் வகையில் விசிக செய்தி தொடர்பாளரின் பேச்சு அமைந்து உள்ளதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.