Share it if you like it
- இந்தியாவின் பிரபலமான சிறந்த இறகுபந்து விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவாலும் அவரது சகோதரி சந்திரன்ஸு வும் பிஜேபி யில் இணைவதாக தகவல் கிடைத்துள்ளது.
- இவர் இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தர வரிசையில் முதலாவதாக உள்ளார். உலக இளநிலை இறகுப்பந்தாட்ட போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே.
- 2012 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார். பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே.
- ஜூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it