தி.மு.க அரசு அமைந்த பின்பு தமிழகத்தில் உள்ள கோவில்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சமீபத்திய டுவிட்டர் பதிவு.
விராலிமலை முருகன் கோவில் மலைபாதையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருக்கும் காட்சியைக் கண்டு மனது உடைந்து நொறுங்கிப் போனேன். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த இழிவான செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து உலக புகழ் பெற்ற பெரம்பலூரில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பது ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில்., கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,000 வருடம் பழமையான சாஸ்தா கோவில் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நிகழ்த்திய சம்பவம் ஹிந்துக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த காணொளியை பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிர்மல் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். கோவில்கள் மீது கொடூர தாக்குதல் நிகழ்ந்து வரும் சமயத்தில் இது குறித்து எல்லாம் வாய் திறக்காமல் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஏன்? மெளனமாக இருந்து வருகிறார் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.