மோடி தாயாருக்கு கொலை மிரட்டல்: சவுக்கு சங்கர் மீது போலீஸில் புகார்!

மோடி தாயாருக்கு கொலை மிரட்டல்: சவுக்கு சங்கர் மீது போலீஸில் புகார்!

Share it if you like it

பிரதமர் மோடி தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நெட்டிசன் சவுக்கு சங்கர் மீது பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்தவன் சங்கர் என்கிற சவுக்கு சங்கர். லஞ்ச ஒழிப்புத்துறையில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றிய இவன், காவல்துறைக்கு எதிராக செயல்பட்டதால் பணியிலிருந்து நீக்கப்பட்டான். இதன்பிறகு, சமூக வலைத்தளப் போராளியாக மாறியவன், தனது இஷ்டம்போல மனதுக்குத் தோண்றியதை எல்லாம் பதிவிடத் தொடங்கினான். மேலும், குடித்துவிட்டு ரகளை செய்வதையும் வழக்கமாக வைத்திருப்பவன். இதனால், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு சில காலம் களி தின்றான். மேலும், அவதூறு கருத்துக்களை பரப்பியதால் இவனது சவுக்கு இணையதளமும் முடக்கப்பட்டது. பின்னர், வேறொரு இணையதளத்தை தொடங்கி தற்போதும் சமூக வலைத்தளங்களில் கம்பு சுற்றி வருகிறான்.

இவனது பதிவுகள் அனைத்தும் அடாவடியாகவும், முகம் சுளிக்கும் வகையிலும்தான் இருக்கும். அதேபோல, இவனது பேட்டிகளும் அடாவடியாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும், அருவெறுக்கத்தக்க வகையிலும்தான் இருக்கும். இவனை பேட்டி எடுப்பதற்கென்றே நாங்களும் ஊடகவியலாளர்கள்தான் என்று சொல்லிக்கொள்ளும் சில யூடிப்பர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கு வேண்டாதவர்கள் பற்றி இவனிடம் பேட்டி எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதேபோல, யாரையாவது பிளாக் மெயில் செய்து பணம் பறிக்க வேண்டுமானாலும், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து வைத்துக் கொண்டு, வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமியாகட்டும், ஓ.பன்னீர்செல்வமாகட்டும் சகட்டுமேனிக்கு வாடா போடா என்றும், தரக்குறைவான வார்த்தைகளாலும் விமர்சிப்பான். அதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் முதல் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வரை எல்லோரையும் ஒருமையிலும், தரக்குறைவாகவும் விமர்சிப்பதுதான் இவனது வேலை. அது மட்டுமா, பா.ஜ.க. தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை முதல் பிரதமர் மோடி வரை அனைவரையும் வாடா போடா என்றும், தகாக வார்த்தைகளாலும் விமர்சித்து வருகிறான். கேவலம், படிப்பிலும், தகுதியிலும் தகுதி இல்லாத ஒருவன், தன்னை உயர்ந்த படிப்பு மற்றும் பதவியில் இருக்கும் தலைவர்களை இப்படி மிகவும் தரக்குறைவாக விமர்சிக்கிறானே என்கிற கோவம் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு.

அதேசமயம், தி.மு.க.வையோ, அதன் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களைப் பற்றியோ விமர்சிக்க வேண்டுமென்றால், சினிமாவில் இடம்பெற்றிருக்கும் ஈயம் பூசியது போல இருக்கணும், பூசாதது போலவும் இருக்கணும் என்கிற கவுண்டமணி டயலாக் போல, பட்டும் படாமலும் பவ்வியமாக விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறான். காரணம், தி.மு.க. ஆட்சியில்தான் இவன் சிறையில் களி தின்றது. அதோடு, சிறையில் சித்ரவதையும் செய்யப்பட்டான். ஆகவே, தி.மு.க.வை தடாலடியாக விமர்சனம் செய்தால் எங்கே மீண்டும் சிறையில் களி திங்கவேண்டிய நிலை ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தால், தற்போதுவரை பம்முவான்.

இந்த நிலையில்தான், பிரதமர் மோடி, காந்திநகரிலுள்ள தனது தாயாரை சந்தித்து ஆசிபெற்றதோடு, அவருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த போட்டோவை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சவுக்கு சங்கர், கிழவிக்கு தண்ணீ வைடா, அப்புறம் அடுத்த வாட்டி போட்டோ எடுக்க முடியாது என்று அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி கமென்ட் செய்திருந்தான். இதைக் கண்ட பா.ஜ.க.வினர் ஆவேசம் அடைந்தனர். இதையடுத்து, மோடி தாயாருக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்ததாகக் கூறி பா.ஜ.க.வின் தென்சென்னை மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான அசோக், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்திருக்கிறார். அப்புகாரில், சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவனது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களையும் முடக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Share it if you like it

One thought on “மோடி தாயாருக்கு கொலை மிரட்டல்: சவுக்கு சங்கர் மீது போலீஸில் புகார்!

  1. for the first time a BJP person has raised an issue. it will be nice if they file a complaint in the court and ensure he is sent to jail. we know that the police will never take action against this guy as DMK is ruling. let us hope for the best

Comments are closed.