ஹிந்துக் கடவுள் முருகனை இழிவுபடுத்தும் ‘படைப்பாளன்’ சினிமா!

ஹிந்துக் கடவுள் முருகனை இழிவுபடுத்தும் ‘படைப்பாளன்’ சினிமா!

Share it if you like it

திரைக்கு வருவதற்கு முன்பே மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறது ‘படைப்பாளன்’ திரைப்படம். இப்படத்தில் ஹிந்துக் கடவுள் முருகனின் வேலை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் கதைத் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. ஒருவர் கஷ்டப்பட்டு தனது மூளையைக் கசக்கி ஒரு கதையை எழுதுவார். அதை படமாக எடுப்பதற்காக தயாரிப்பாளர்களைத் தேடி அலைவார். அந்தக் கதையை படித்துப் பார்த்துவிட்டு சொல்வதாகக் கூறி சில தயாரிப்பாளர்கள் வாங்கி வைத்துக் கொள்வார்கள். அந்தக் கதை நன்றாக இருந்தால், கதையை கொடுத்தவருக்கே தெரியாமல், பிரபல இயக்குனரை வைத்து படத்தை எடுத்து விடுவார்கள். அந்தப் படம் திரைக்கு வந்த பிறகுதான், அது தன்னுடைய கதை என்பதே, அந்த கதையை எழுதியவருக்குத் தெரியும். பின்னர், இது எனது கதை என்று சொல்லி கோர்ட், கேஸ் என்று அலைவதுதான் மிச்சமாகும்.

இப்படி உதவி இயக்குனர் ஒருவர் ஒரு கார்ப்பரேட் கம்பெனியிடம் கதை சொல்லப்போனதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. 2008-ம் ஆண்டில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவான வெள்ளித்திரை படத்தின் கதையை லேசாக பட்டி, டிங்கரின் பார்த்து பெயின்ட் அடித்து புதிய கதை போல காட்ட முயற்சித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் தியான் பிரபு. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனமும் இவர்தான். நட்சத்திரம் செபஸ்தியான் என்பவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர். இப்படத்தில்தான் ஹிந்துக் கடவுள் முருகனின் வேலை இழிவுபடுத்தும் வகையில், ஒரு காட்சியில் மிகவும் கேவலமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் மார்ச் 12-ம் தேதி ரிலீஸானது. இதைப் பார்த்த ஹிந்துக்களுக்கு பயங்கர அதிர்ச்சி. காரணம், படத்தில் முருகனின் வேலை எந்தளவுக்கு கொச்சைப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு கொச்சைப்படுத்தி காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதாவது, உடலுறவு கொள்ளும் பெண் ஒருவர், உச்சகட்ட நிலையில் வலி தாங்காமல் ‘முருகா உன் வேலுக்கு எவ்வளவு பூஜை செய்திருக்கிறேன். என்னை கப்பாத்து’ என்று சொல்கிறார். அதற்கு அந்த ஆண், ‘பூஜை செய்வதற்குத்தானே வேல் இருக்கிறது’ என்று ஆபாசமாக பதிலளிக்கிறான். மதத்தை இழிவுபடுத்தும் வகையில் இப்படியொரு காட்சி இருந்தால் என்னதான் செய்வார்கள்? அதான் ஹிந்துக்கள் கொந்தளித்து விட்டார்கள். இதையடுத்து, படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே இப்படித்தான், கருப்பர் கூட்டம் என்கிற திராவிடர் கழக கும்பலைச் சேர்ந்த ஒருவன், கந்தசஷ்டி கவசத்தில் இடம் பெற்றிருக்கும் வரிகளை சுட்டிக்காட்டி முருகனின் வேலை இழிவுபடுத்தினான். இப்படி ஹிந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்திய அவன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் சிலகாலம் களி தின்றான். அதேபோல, தற்போது மிஷனரி கும்பல் முருகனின் வேலை சினிமாவில் இழிவுபடுத்தி இருக்கிறது. ஆகவே, இக்கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றன. தவிர, இனிவரும் காலங்களில் இவ்வாறு ஹிந்து மதத்தையும், ஹிந்து தெய்வங்களையும் இழிவுபடுத்தும் வகையில், எந்தத் திரைப்படங்களிலும் காட்சிகள் இடம்பெறாமல் தவிர்ப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இதனிடையே, ஹிந்துக்களின் கடும் எதிர்ப்பால், முருகனின் வேலை இழிவுபடுத்தும் வகையில் இடம்பெற்றிருந்த காட்சியை நீக்குவதாக உறுதியளித்த படைப்பாளன் படக்குழு, அக்காட்சியை நீக்கி புதிய டிரைலரை வெளியிட்டிருக்கிறது. மேலும், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் தியான் பிரபு என்கிற கிறிஸ்தவ பெயரை மாற்றி, எல்.எஸ்.பிரபு ராஜா என்று ஹிந்து பெயரை வைத்திருக்கிறது. இதைப் பார்த்துவிட்டு எப்படியெல்லாம் தில்லாலங்கடி வேலை பார்க்குறானுங்க பாருங்க என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அதேபோல, மதத்தை இழிவுபடுத்தும் வகையிலோ, மத மோதலை ஏற்படுத்தும் வகையிலோ யாரேனும் செயல்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆகவே, படைப்பாளன் திரைப்படக் குழுவினர் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

https://m.facebook.com/story.php?story_fbid=329746119186365&id=100064529394212


Share it if you like it