தி.மு.க.வை கலாய்த்து ‘ஸ்டிக்கர்’ பாடல்!

தி.மு.க.வை கலாய்த்து ‘ஸ்டிக்கர்’ பாடல்!

Share it if you like it

தி.மு.க.வை கலாய்த்து வெளியாகி இருக்கும் ஸ்டிக்கர் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதிதாக ஆட்சி்க்கு வந்திருக்கும் தி.மு.க. அரசு, மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை எல்லாம், தாங்கள் கொண்டு வந்த திட்டங்களைப் போல அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதனால், ஸ்டிக்கர் தி.மு.க. என்று பா.ஜ.க.வினர் கிண்டல் செய்து வருகின்றனர். உதாரணமாக, தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா அமைக்கும் திட்டம் 2020-ம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம். இத்திட்டத்தை தி.மு.க. அரசின் புதிய திட்டம்போல அறிவித்து, அடிக்கல் நாட்டி வைத்தார் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின்.

அதேபோல, அப்துல் கலாம் என்கிற சிறுவனுக்கு மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் இலவச வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தமிழக அரசு மூலம் வீடு ஒதுக்கப்பட்டதாக தி.மு.க. பில்டப் செய்து, முதல்வர் ஸ்டாலின் கையால் வழங்கப்பட்டது. மேலும், தற்போது உக்ரைனில் போர் நடந்துவரும் சூழலில், அங்கு சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை, ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம் மத்திய அரசு பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தது. ஆனால், இதையும் தி.மு.க. அரசு மீட்டதுபோல மார்தட்டிக் கொண்டார்கள். இதனால், ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் ஸ்டிக்கர் தி.மு.க. என்று கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களிலும் மீம்ஸ்களை தட்டிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்தான், கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘விக்ரம்… விக்ரம்’ என்ற பாடலை ‘ஸ்டிக்ரம்… ஸ்டிக்ரம்’ என்று ரீமிக்ஸ் செய்து, தி.மு.க.வை கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். இந்த பாடல்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it