பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு டெல்லி மேலிடம் மீண்டும் முக்கியத்துவம் வழங்கி இருக்கிறது. இதை தொடர்ந்து, அவருக்கு பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருப்பவர் வானதி சீனிவாசன். இவர், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். இதனிடையே, தேசிய மகளிரணித் தலைவியாக பா.ஜ.க. மேலிடம் அண்மையில் அவரை நியமனம் செய்து இருந்தது. இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க.வின் அதிகாரமிக்க மத்திய தேர்தல் குழுவில் வானதி சீனிவாசன் இடம் பெறுவதாக டெல்லி மேலிடம் நேற்றைய தினம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாரதப் பிரதமர் மோடி தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். அதனை மெய்ப்பிக்கும், வகையில் தமிழர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறார். தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநராக இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து, பா.ஜ.க.வின் மற்றொரு மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் மற்றும் மேற்குவங்க ஆளுநராக இருந்து வருகிறார். இதுதவிர, வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழர்கள் குறித்து பிரதமர் மோடி மிக உயர்வாக பேசி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் தான், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு இந்த முக்கிய பொறுப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.