ரூட் மாறும் காங்கிரஸ்… கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி!

ரூட் மாறும் காங்கிரஸ்… கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி!

Share it if you like it

விநாயகர் சிலையை அமைக்க வேண்டி காவல்துறையிடம் காங்கிரஸ் கட்சி அனுமதி கேட்டு இருக்கும் சம்பவம் கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அடுத்த ஆண்டிற்குள் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் இருக்குமா? என்ற ஐயம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. நாடாளுமன்றம், சட்டமன்றம் என தொடர்ந்து அக்கட்சி படுதோல்வியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் கட்சிக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து, பல முன்னணி தலைவர்கள் அக்கட்சியை விட்டே ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், நாட்டு மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சி மெல்ல மெல்ல இழந்து வருகிறது என்பதே நிதர்சனம். இதையடுத்து, மக்களின் நம்பிக்கையை பெற வேண்டி பல்வேறு முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. அதனைமெய்ப்பிக்கும் வகையில், ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தற்போது கோவில் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், விநாயகர் சிலையை அமைக்க வேண்டி அக்கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் அனுமதி கேட்டு இருப்பது தான் பொதுமக்கள் மத்தியில் பெரும் வியப்பையும், கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

விநாயகர் சதுர்த்தியை பெரும்பாலும் பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் மிக விமர்சையாக கொண்டாடும். ஹிந்துக்களின், புனித பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு தி.மு.க. காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் கூட தங்களது வாழ்த்துகளை தெரிவிப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில் தான், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திண்டுக்கல் மாவட்ட தலைவர் துரைமணிகண்டன், திண்டுக்கல்லில், 57 இடங்களில் விநாயகரின் சிலைகளை நாங்கள் அமைக்க உள்ளோம் என கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it