வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர். எஸ். பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்
தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது வடமாநில தொழிலாளர்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டன. குறிப்பாக, அக்கட்சியின் கழக முன்னோடிகள் தங்களது வன்மத்தை இன்று வரை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தான், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியது. இதையடுத்து, தமிழகத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, வதந்தி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தான், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி இவ்வாறு கூறியிருக்கிறார் : வதந்தி பரப்பி வன்முறைச் சூழலை உருவாக்க நினைத்தால் சட்டரீதியான நடவடிக்கையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்.எஸ். பாரதி ஐயா வடமாநில தொழிலாளர்கள் குறித்து பேசிய காணொளி இந்தாங்கோ..