ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வைப்பது எம்.பி.க்களின் கடமை  – மத்திய அமைச்சர் கருத்து!

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வைப்பது எம்.பி.க்களின் கடமை – மத்திய அமைச்சர் கருத்து!

Share it if you like it

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வயநாடு எம்.பியாக இருப்பவர் ராகுல் காந்தி. இவர், அண்மையில் அயல்நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். அப்போது, பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்தியாவை மிக கடுமையாக விமர்சனம் செய்தார். இவரின், கருத்து ஒத்து மொத்த இந்தியாவையும் அவமதிப்பு செய்து விட்டது என பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க. மூத்த தலைவரும் சட்டத்துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜூ டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ; ”இந்தியாவிற்கு எதிராக உள்ளவர்கள் பேசுவதைப் போல் ராகுல் காந்தி பேசி இருக்கிறார். தனது பேச்சுக்காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை மன்னிப்பு கேட்க வைப்பது நமது கடமை. அவர் தனது செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வாரென்றால் அதில் எங்களுக்கு எந்த விதமான அக்கறையும் இல்லை. ஆனால் இந்தியாவைப் பற்றி அவதூறாகப் பேச அவருக்கு உரிமை இல்லை. எங்களால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. தேசத்தைப் பற்றிய எந்த ஒரு விஷயமும் அனைவருக்கும் கவலையளிக்கவே செய்யும். நாட்டை அவமதிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டார்கள். அதற்காக அவர்கள் நாட்டை விமர்சிக்கலாம் என்று அர்த்தமில்லை.

ராகுல் காந்தி இந்தியாவைப் பற்றி லண்டனில் பேசியவை அனைத்துமே பொய். முதலில் அவர், தனக்கு நாடாளுமன்றத்தில் பேச அனுமதி வழங்கப்படவே இல்லை என்றார். இது முற்றிலும் தவறான ஒன்று. ராகுல் காந்தி தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரமும் சுதந்திரமாகவும் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.

இரண்டாவதாக, தான் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பேச அனுமதிக்கப்படவில்லை என்று ராகுல் தெரிவித்துள்ளார். இதுவும் முற்றிலும் பொய்யான ஒன்று. தனது யாத்திரையின் போது ஒரு நாளில் பல முறை அரசாங்கத்தை எதிர்த்து ராகுல் காந்தி பேசியிருக்கிறார். நாட்டில் அதிகம் பேசக்கூடிய நபர் ராகுல் காந்திதான். அவர் நாடாளுமன்றத்தின் மதிப்பை குலைத்துவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக அவர் அரசியலமைப்பையும் நீதித்துறையையும் அவமதித்து விட்டார்.

ராகுல் காந்தி யார் என்பது இந்தியர்களுக்குத் தெரியும். ஆனால் வெளிநாட்டில் உள்ள மக்கள் அவர் உண்மையைப் பேசுவதாகவே எண்ணிக்கொள்வார்கள். காங்கிரஸ் லண்டனுக்குச் சென்று மன்னிப்பு கேட்குமா. அவரை மன்னிப்பு கேட்க வைப்பது நமது கடமை” என தெரிவித்தார்.


Share it if you like it