உதயநிதி தொகுதியில் மூன்று பெண்கள் குடித்துவிட்டு ஆண்களிடம் ரகளை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் பூரண மது விலக்கு உண்டு என தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி, தி.மு.க. எம்.பி. கனிமொழி கடந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தனர். இதனை நம்பி, பொதுமக்கள் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்தனர். எனினும், விடியல் ஆட்சியில் பூரண மதுவிலக்கு இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை.
பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் என பெண்களின் வாழ்க்கையே மதுவினால் தொடர்ந்து சீரழிந்து வருகிறது. இதனை, கண்டும் காணாமல் கல்லா கட்டுவதிலேயே விடியல் அரசு குறியாக உள்ளது. மேலும், மதுவிற்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளன. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், அமைச்சர் உதயநிதி தொகுதியில் மூன்று பெண்கள் மதுபோதையில் ஆண்களிடம் வம்பு இழுத்துள்ளனர். இதுதொடர்பான காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
பூரண மதுவிலக்கு எப்போது வரும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.