“சவுராஷ்டிரா – தமிழ் சங்கமம் நல்ல பிணைப்பை உருவாக்கியுள்ளது என பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின் கீழ் குஜராத்தில் ஏப்.17முதல் 26-ம் தேதி வரை ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொள்ளும் வகையில், ஒரு ரயிலுக்கு 300 பேர் என மொத்தம் 10 ரயில்களில் 3,000 பேர் தமிழகத்தில் இருந்து நேற்று குஜராத் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், பாரதப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த சிறப்பான புத்தாண்டு தினத்தில், மதுரையில் இருந்து வெரவல் வரை ஒரு சிறப்பு பயணம் தொடங்கியுள்ளது. சவுராஷ்டிரா சங்கமம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும். இது மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.