தி.மு.க.வின் சாதனை விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரழலில் நிதியமைச்சரின் பெயரை கட்சி மேலிடம் நீக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. அரசு தனது இரண்டு ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. அந்த வகையில், தி.மு.க.வின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது. அதன்படி, தி.மு.க.வின் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த, பேச்சாளர்களின் பட்டியலில் நிதியமைச்சரின் பெயர் இடம் பெறவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான முதல் பட்டியலில் பி.டி.ஆர். பெயர் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ ஒன்று அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் இருவரும் கடந்த ஒரு வருடத்தில் ரூ. 30,000 ஆயிரம் கோடி சொத்து குவித்துள்ளனர் என்ற பகீர் தகவலை கூறியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் தான், மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நிதியமைச்சரின் பெயரை நீக்கி தி.மு.க. மேலிடம் தனது கோவத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.