Share it if you like it
பால்வளத்துறை அமைச்சர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருப்பது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க.வின் மூத்த தலைவர் மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஆவடி நாசர். இவர், தமிழக அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கை இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆவடி நாசரின் செயல்பாடுகள் தி.மு.க.விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் முதல்வர் இந்த நடவடிக்கையை எடுத்தாக கட்சி மேலிடம் தெரிவிக்கின்றன.
ஆவடி நாசர், மீது எடுத்த நடவடிக்கையை மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீது முதல்வர் ஏன் எடுக்கவில்லை? என இஸ்லாமியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Share it if you like it