ராஜ்பவனில் முதல்வர் செய்த காமெடி!

ராஜ்பவனில் முதல்வர் செய்த காமெடி!

Share it if you like it

அமைச்சருக்கு பூங்கொத்தை கொடுக்க சொன்ன தொகுப்பாளர் முதல்வர் செய்த செயலால் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் டி.ஆர். பாலு. இவரது, மகன் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இதனிடையே, தமிழகத்தில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, டி.ஆர்.பி. ராஜா நேற்றைய தினம் தொழில்துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

அந்த வகையில், புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட அமைச்சருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார். இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிற்கு பூங்கொத்து வழங்குவார் என தொகுப்பாளர் அறிவித்தார். இதனை தொடர்ந்து, முதல்வரிடம் பூங்கொத்து வழங்கப்பட்டது. தொகுப்பாளர் கூறியதை மறந்து விட்டு அந்த பூங்கொத்தினை தமிழக ஆளுநரிடம் முதல்வர் வழங்கி விட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். இதனை, சற்றும் எதிர்பார்க்காத ஆளுநர் அவை நாகரிகம் கருதி முதல்வரிடமிருந்து பூங்கொத்தினை பெற்றுக் கொண்டார்.

இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it