ராஜாவுக்கு அமைச்சர் பதவி… ஐ.பெரியசாமி மருமகள் ஆவேசம்!

ராஜாவுக்கு அமைச்சர் பதவி… ஐ.பெரியசாமி மருமகள் ஆவேசம்!

Share it if you like it

தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அவரது மருமகள் கொந்தளித்திருக்கிறார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன்தான் பழனி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் செந்தில்குமார். இவர், தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்த மெர்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்துக்கு ஐ.பெரியசாமி எதிர்ப்புத் தெரிவித்ததால், தற்போதுவரை செந்தில்குமார், மெர்ஸி குடும்பத்திலிருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். எனினும், தனது மகனுக்கு 2 முறை சீட் வாங்கி எம்.எல்.ஏ.வாக்கி இருக்கிறார். தற்போது பழனி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

சரி, விஷயத்துக்கு வருவோம்…

மெர்ஸியை பொறுத்தவரை, செந்தில்குமாரை திருமணம் செய்து ஹிந்து பெண் போல வாழ்ந்து வந்தாலும், தனது கிறிஸ்தவ மதத்தின் மீதான பாசத்தில் சிறிதும் குறைவில்லாமல் இருந்து வருகிறார். கடந்தாண்டு உயிரிழந்த ஸ்டேன் சாமியின் அஸ்தி, திண்டுக்கலுக்கு எடுத்துவரப்பட்டு, பெஸ்ஸி சர்ச்சில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய மெர்ஸி, பாதிரியார்களையோ, கன்னியாஸ்திரிகளையோ கைது செய்வதற்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது. மீறி கைது செய்ய வேண்டுமென்றால், வாடிகனில் இருக்கும் போப்பிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையானது. இதன் மூலம் இவரது மதப்பற்று பற்றி தெரிந்துகொள்ளலாம்.

இந்த நிலையில்தான், தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி. டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதை மையமாக வைத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார் மெர்ஸி. அதாவது, தனது மகன் எப்போது அமைச்சராக வேண்டும் என்பதை தந்தையே முடிவு செய்யகிறார்கள். உழைப்பு அல்ல என்பதை புரிந்த நாள் இன்று. என் தனிப்பட்ட கருத்து இது. என்னை சிந்திப்பதை நிறுத்தச் சொல்கிறார்கள். உரிமையை கேட்காதே என்கிறார்கள். தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் மாமா என்று ஐ.பெரியசாமிக்கு எதிராக பகிரங்கமாக கருத்துப் பதிவிட்டிருக்கிறார்.

இந்த பதிவுதான் தற்போது பெரும் சர்ச்சயை கிளப்பி இருக்கிறது. மெர்ஸியின் பதிவு ஐ.பெரியசாமியை மட்டுமல்லாது தி.மு.க. தலைமையையும் அப்செட்டாக்கி இருக்கிறது. முழு வீடியோவையும் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…


Share it if you like it