திருச்செந்தூர் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… பிரகாரத்தில் பாலை கொட்டிச் சென்ற பக்தர்கள்!

திருச்செந்தூர் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… பிரகாரத்தில் பாலை கொட்டிச் சென்ற பக்தர்கள்!

Share it if you like it

பால்குடம் எடுத்து வந்த பக்தர்களை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குள் அனுமதிக்காததால், கிரிவல பிரகாரத்திலேயே பாலை கொட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயில் கடற்கரையை ஒட்டி அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் வைத்து பால்குடம் ஏந்தி வருவது வழக்கம். அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி சுமந்து பாதயாத்திரையாக வந்தனர். இவர்கள், வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக 51 குடங்களில் பால்குடம் எடுத்து வந்தனர்.

ஆனால், மேற்படி பக்தர்களை கோயில் நிர்வாகத்தினர் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால், சுமார் 9 நாட்களாக 250 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்தும் வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லை என்று வேதனை தெரிவித்த பக்தர்கள், விரக்தியில் தாங்கள் சுமந்து வந்த 51 பால் குடத்தையும், கிரிவல பிரகாரத்திலேயே கொட்டிவிட்டுச் சென்றனர். இதனால், கிரிவல பிரகாரம் முழுவதும் பால் வழிந்தோடியது. இந்த அபிஷேக பாலை பக்தர்கள் மிதித்து நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

250 கிலோ மீட்டர் பாதயாத்திரையாக வந்த பக்தர்களை, கோயில் நிர்வாகம் கோயிலுக்குள் அனுமதிக்காத இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க. அரசின் இதுபோன்ற அராஜகங்களை பக்தர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.


Share it if you like it