வருமான வரிச் சோதனையால் செந்தில்பாலாஜிக்கு நெருக்கடியா என்கிற விவாத நிகழ்ச்சியில், கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தி.மு.க. பேச்சாளர் பாதியிலேயே ஓட்டம் பிடித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ரெய்டுக்குச் சென்ற அதிகாரிகள் மற்றும் அவரது கார்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் அரங்கேறியது. இந்த சூழலில், வருமான வரிச்சோதனையால் செந்தில்பாலாஜிக்கு நெருக்கடியா என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று விவாத நிகழ்ச்சியை நடத்தியது.
இந்நிகழ்ச்சியின் நெறியாளராக தமிழரசன் செயல்பட, தி.மு.க. சார்பில் தமிழ் கா.அமுதரசன், அ.தி.மு.க. சார்பில் கோவை சத்யன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னி அரசு, அரசியல் விமர்சகர் சுப்பிரமணியன், ஊடகவியலாளர் அயன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர், அ.தி.மு.க.வினர் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தி.மு.க. பேச்சாளர் அமுதரசன் பாதியிலேயே ஓட்டம் பிடித்தார். இச்சம்பவம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.