செக்யூலரிஸம் என்றால் என்ன? திராவிட கும்பலுக்கு பாடம் நடத்திய பேரா.சீனிவாசன்!

செக்யூலரிஸம் என்றால் என்ன? திராவிட கும்பலுக்கு பாடம் நடத்திய பேரா.சீனிவாசன்!

Share it if you like it

செக்யூலரிஸம் என்றால் என்ன என்பது குறித்து பா.ஜ.க.வைச் சேர்ந்த பேராசிரியர் சீனிவாசன் திராவிட கும்பலுக்கு பாடம் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட பார்லிமென்ட் கட்டடத்தில் செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. அந்த செங்கோலில் நந்தி உருவம் இடம் பெற்றிருக்கிறது. ஆகவே, இது ஹிந்து மதத்தை மட்டும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் இருப்பதாகவும், மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தவறான முன்னுதாரணம் என்றும், திராவிட கும்பல் கதறி வருகிறது. மேலும், ஆதீனகர்த்தர்களை வைத்து செங்கோலை புனிதப்படுத்தியதும், திராவிட கும்பலின் மனதை புண்படுத்தி இருக்கிறது. ஆகவே, கதறல் சத்தம் சற்று அதிகமாகவே இருக்கிறது.

இந்த நிலையில்தான், பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன், செக்யூலரிஸம் என்றால் என்ன என்பது குறித்து திராவிட கும்பலுக்கு பாடம் நடத்தி இருக்கிறது. இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் அளித்த பேட்டியில், “இந்தியா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பண்பாடு, ஆன்மிகம், ஹிந்து மதம் சார்ந்த தேசம். கிறிஸ்தவமும், இஸ்லாமும் வெளிநாடுகளில் இருந்து வந்த மதங்கள்தான். அப்படிப்பட்ட இந்த தேசத்தில் வெளிநாட்டு கலாசாரத்துக்கும், நமது கலாசாரத்துக்கும் வித்தியாசம் இருக்குமல்லவா? ஆகவே, இந்தியாவில் எதுவாக இருந்தாலும் அதில் ஹிந்து கேரக்டர் இருக்கத்தானே செய்யும்.

அந்த வகையில், செங்கோலில் நந்தி இருப்பது ஹிந்து மதம் சார்ந்த பிரதிநிதித்துவம் கிடையாது. ஹிந்து கேரக்டர். அரசு முறை பயணமாக இங்கிலாந்துக்குச் சென்றால், அரசு அதிகாரிகள் இருக்கும் கூட்டத்தில் ஆர்ச் பிஷப் வருவார். அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கிறார்கள். அவர் பிரேயர் சொன்ன பிறகுதான் டின்னர் சாப்பிடுவார்கள். அங்கு ஏன் கிறிஸ்தவ பாதிரியாரை அழைக்கிறார்கள் என்று கேட்க முடியுமா? அல்லது முஸ்லீம், ஹிந்து மதகுருமார்களை அழைக்கவில்லை என்றுதான் கேட்க முடியுமா?

செக்யூலரிஸம் என்றால் என்னவென்றே தெரியாமல் பலரும் பிதற்றுகிறார்கள். செக்யூலரிஸம் என்பது ஒரு மதத்தை இன்னொரு மதம் வேண்டாம் என்று சொல்லக் கூடாது என்பதுதான். ஒரு மதத்தை மறுதலிக்காமல் அனைவரையும் சமமாக மதிப்பதுதான் செக்யூலரிஸம். அந்த வகையில், ஹிந்து மதத்தை பொறுத்தவரை, நீ இன்னொரு மதத்திடம் காழ்ப்புணர்ச்சியோடு இரு, உன் மதம் மட்டுமே உண்மையான மதம் என்று சொல்லவில்லை என்று உ.பி.க்களுக்கு பாடம் நடத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it