முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் குழந்தைகள்: சீமான் அதிரடி பேச்சால் பரபரப்பு!

முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் குழந்தைகள்: சீமான் அதிரடி பேச்சால் பரபரப்பு!

Share it if you like it

முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் குழந்தைகள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய சீமான், “இலங்கையில் நமது தமிழின மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும், பெண்களுக்கு எதிரான அக்கிரமங்களையும் கண்கூடாக பார்த்தோம். கொடுமைகள் என்றால் என்ன என்பது நமக்கு நன்றாகவே தெரியும். எனவே, எங்கோ ஒரு மூளையில் உள்ள மணிப்பூருக்காக பேசுகிறோம். இதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை. மணிப்பூரில் இருந்து வந்து நமக்கு யாரும் ஓட்டு போடப்போவதும் இல்லை. இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்தவர்களும் நமக்காக வாக்களிக்கப்போவது கிடையாது.

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால், அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகி விட்டது. சும்மா போய் தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்திருக்கிறார்கள். இந்நாட்டில் நடந்திருக்கும் அநீதி, அக்கிரமங்களுக்கு பொறுப்பேற்க வேண்டியதே இஸ்லாமியர்களும், கிறிஸ்துவ மக்களும்தான். தொடர்ச்சியாக பல ஆண்டுகள் 18 விழுக்காடு வாக்குகளை தி.மு.க.வுக்கும், காங்கிரஸுக்கும் போட்டு போட்டு இந்த நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள்தான்” என்றார். இதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it