மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: போலி போராளிகளுக்கு ஐகோர்ட் சம்மட்டி அடி!

மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: போலி போராளிகளுக்கு ஐகோர்ட் சம்மட்டி அடி!

Share it if you like it

மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக அறிவுரை வழங்கியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி உள்ளிட்ட நடிகர்களும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர். அதேசமயம், மாணவர்கள் என்ன படிக்க வேண்டும்? எதை படிக்க வேண்டும்? என்கிற விஷயத்தில் நடிகர்கள், அரசியல்வாதிகள் தலையிடுவது வெட்கக்கேடான செயல். மும்மொழி கல்விக் கொள்கை நிச்சயம் தேவை என்று கல்வியாளர்கள், சர்வதேச கல்வி நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் எழுப்பி இருக்கும் கேள்விகள்…

  • மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்க்கும் நபர்கள் தங்களின் குழந்தைகள், பேரக் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று கூற முன்வருவார்களா?
  • ஏழை மாணவர்களுக்கு கிடைக்காத கல்வி தனியார் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கக் கூடாது என்று கூறுவார்களா?
  • அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் தாங்கள் நடத்தும் பள்ளியில் மும்மொழி கற்பிக்கப்படுவதை நிறுத்துவார்களா?
  • ஏழை மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்று தீர்மானிக்க இவர்கள் யார்?
  • ஏழைக்கு ஒரு வகை கல்வி, மத்திய வகுப்புக்கு ஒரு வகை கல்வி , பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி, மகா பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி என்று வகை பிரித்து இங்கு கல்வி விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
  • மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் மும்மொழி கொள்கைக்கு தனது முழு ஆதரவை தெரிவித்திருப்பார் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்தான், மும்மொழி கல்விக் கொள்கையை பின்பற்றுவதில் தமிழக அரசுக்கு என்ன சிக்கல்? பிற மாநிலங்களில் பணியாற்றுபவர்களின் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவுரைதான் மும்மொழி கல்விக் கொள்கையை வேண்டாம் என்று கூறிவரும் நடிகர் சூர்யா உள்ளிட்ட போலி போராளிகளுக்கு சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது.


Share it if you like it