மக்கள் தீர்மானிக்கட்டும்… தமிழக அரசு அல்ல – குஷ்பு காட்டம்!

மக்கள் தீர்மானிக்கட்டும்… தமிழக அரசு அல்ல – குஷ்பு காட்டம்!

Share it if you like it

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டு இருப்பதற்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இப்படத்திற்கு வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், விடியல் ஆட்சியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க. மூத்த தலைவரும் பிரபல நடிகையுமான குஷ்பு இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

தி கேரளா ஸ்டோரியை தடை செய்ய போராடுபவர்களுக்கு என்ன பயம். அப்பட்டமாக சொல்லப்பட்ட உண்மை அல்லது உண்மையின் ஒரு பகுதியாக இருப்பதை உணரும் பயம். எதைப் பார்க்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். மற்றவர்களுக்காக நீங்கள் முடிவு செய்ய முடியாது. நிகழ்ச்சிகளை ரத்து செய்ய தமிழக அரசு நொண்டிக் காரணங்களைச் சொல்கிறது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி.


Share it if you like it