செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது ஆதித்யா

செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது ஆதித்யா

Share it if you like it

சந்திரயான்-3 திட்ட வெற்றிக்குப் பிறகு சூரியனை ஆய்வு செய்யும் பணியிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக தயாரிக்கப்பட்ட ஆதித்யா-L 1 விண்கலம் அடுத்த மாதம் 2-ம் தேதி காலை 11.50. விண்ணில் செலுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனின் LAGRANGE புள்ளியில் ஆதித்யா- L1 நிறுத்தப்படும். பி.எஸ்.எல். வி.சி. C57 ராக்கெட் மூலம் ஆதித்யா-L1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் எடை1,475 கிலோவாகும்.


Share it if you like it