ஹிஜாப் அணியாதவர்கள் மிருகம்!

ஹிஜாப் அணியாதவர்கள் மிருகம்!

Share it if you like it

ஹிஜாப் அணியாத பெண்கள் மிருகங்கள் என்று எழுதப்பட்ட போஸ்டர்களை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டி வைத்திருக்கிறார்கள் தலிபான்கள்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றி இருக்கிறார்கள் தலிபான்கள். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றியபோது, 1996 – 2001 ஆட்சியின்போது பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் தொடராது என்று தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் தங்களது அடக்குமுறைகளை தொடங்கி விட்டார்கள். முதலில் பெண்களுக்கான கல்வி உரிமையை பறித்தவர்கள், பெண்கள் தனியாக வெளியே செல்லக் கூடாது, புர்கா, பர்தா, ஹிஜாப் அணியாமல் செல்லக் கூடாது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண்களும்கூட உடலை முழுவதுமாக மூடி இருக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால், ஆப்கானிஸ்தான் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கூட எப்படியாவது இந்த நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட மாட்டோமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், தெற்கு ஆப்கனில் உள்ள காந்தகார் நகர் முழுவதும் தலிபான்கள் புதிதாக போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்கள். அந்த போஸ்டரில், ‘பெண்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும். அப்படி அணியாத பெண்கள் மிருகங்களைப் போல தோற்றமளிக்க முயல்கின்றனர். குட்டையான, இறுக்கமான, மெல்லிய ஆடைகள் அணிவது தலிபான் கொள்கைகளுக்கு எதிரானது என்கிற வாசகம் இடம் பெற்றிருக்கிறது. குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அதேபோல, முக்கிய சாலைகளில் விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து ஆப்கன் அமைச்சக அதிகாரி அப்துல் ரஹ்மான் தயேபி கூறுகையில், “முகத்தை மறைக்காமல் பொது இடங்களுக்கு வரும் பெண்களுக்காகவே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. உத்தரவை மதிக்காத பெண்களின் வீட்டில் உள்ள ஆண்கள், அரசு வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்” என்றார்.


Share it if you like it