தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா : ஜாலியாக கோல்ப் விளையாடும் முதல்வர் ஸ்டாலின் !

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா : ஜாலியாக கோல்ப் விளையாடும் முதல்வர் ஸ்டாலின் !

Share it if you like it

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. குழு தலைவர் வினீத் குப்தா தலைமையிலான கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் அதிகாரிகள் பங்கேற்றார். காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வைத்த வாதத்தில், “ஜூன் 1 2023 முதல் ஏப்ரல் 28 2024 வரை அதாவது நேற்று முன்தினம் வரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 174 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும். ஆனால் வெறும் 75 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. சுமார் 95 டிஎம்சி தண்ணீர் தரவேண்டியது நிலுவையில் இருப்பதாகவும்” தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தவிர பிப்ரவரி மாதத்தில் இருந்து வருகிற 28 ம் தேதி வரை சுமார் 7.3 டிஎம்சி அளவு தண்ணீரை சுற்றுச்சூழல் நீராக கர்நாடகா தந்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைக்கப்பெற்று இருப்பதாகவும், 5.3 டிஎம்சி தண்ணீர் குறைத்து தந்திருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து கர்நாடக அரசு வைத்த வாதத்தில், “கர்நாடகாவில் உள்ள 4 முக்கிய அணைகளில் உள்ள நீர், இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே உள்ளது. இதனால் மேலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியது”.

ஒருபுறம் தமிழகம் தண்ணீருக்காக கர்நாடகாவிடம் கையேந்தி கொண்டிருக்கிறது. இதற்கும் எனக்கும் சம்மதமில்லை என்று மறுபுறம் கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கோல்ப்மைதானத்தில் ஜாலியாக கோல்ப் விளையாடி கொண்டிருகிறார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *