‘அக்னிபாத்’: இதுக்கு மேல யாரும் அட்வைஸ் பண்ண முடியாது!

‘அக்னிபாத்’: இதுக்கு மேல யாரும் அட்வைஸ் பண்ண முடியாது!

Share it if you like it

அக்னிபாத் திட்டம் என்பது என்ன, அதன் பயன்கள் என்ன என்பது குறித்து ஒரு ராணுவ வீரர் மிகவும் அருமையாக விளக்கி இருக்கிறார். ஆகவே, இந்த செய்தியையும், காணொளியையும் தவிர்த்து விடாதீர்கள்.

மத்திய அரசு புதிதாக அறிவித்திருக்கும் திட்டம்தான் ‘அக்னிபாத்’. அதாவது, அதிக அளவிலான இளைஞர்களை இந்திய ராணுவத்தில் சேர்த்து ராணுவத்தை வலிமையாக்குவதும், இளமையாக்குவதும்தான் இதன் நோக்கம். இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 45,000 முதல் 50,000 வரையிலான இளைஞர்களுக்கு ராணுவத்தில் பணிபுரிய வாய்ப்புக் கிடைக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற பலரது ஆசை மற்றும் கனவு இத்திட்டத்தின் மூலம் நிறைவேறும். அதோடு, சம்பளமாக முதல் 3 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் 30,000 ரூபாயும், 4-வது ஆண்டில் 40,000 ரூபாயும் கிடைக்கும்.

மேலும், இத்திட்டத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு வெளியே வரும்போது கையில் 12 லட்சம் ரூபாய் ரொக்கமாகக் கிடைப்பதோடு, மாநில காவல்துறை, மத்திய தொழில் பாதுகாப்புப்படை, ரயில்வே பாதுகாப்புப்படை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னுரிமை கிடைக்கும். ஒருவேளை ராணுவத்தில் பணிபுரியும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் சுமார் 1 கோடி ரூபாய் வரை குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும். தவிர, உடல் ஊனமுற்றால், ஊனத்துக்கு தகுந்தார்போல் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை வழங்கப்படும். அது மட்டுமா? வேலைக்குச் செல்ல விருப்பமில்லாதவர்கள் சுயமாக தொழில் தொடங்க விரும்பினால், வங்கிக் கடன் உதவி வழங்கப்படும்.

ஆனால், இத்திட்டத்தில் இவ்வளவு பயன்கள், நன்மைகள் இருந்தபோதிலும், இதைப் பற்றி முழுவதும் அறியாமல் சிலர் போராட்டத்தில் குதித்திருப்பதோடு, பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்து வருகிறார்கள். ராணுவத்தில் சேர வேண்டும் என்ற மன உறுதியோடும், கனவோடும் இருப்பவர்கள் இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடமாட்டார்கள் என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் கருத்தாக இருக்கிறது. அதேசமயம், சிலர் தங்களது சுயநலத்துக்காக அப்பாவி இளைஞர்களை தூண்டி விட்டு குளிர் காய்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நபர்களுக்காகவே, ஒரு ராணுவ வீரர் சில அட்வைஸ்களை வழங்கி இருக்கிறார்.

கீழ்க்கண்ட வீடியோவை பார்த்து புரிந்துகொள்ளுங்கள்….


Share it if you like it