பா.ஜ.க.வில் பிரியங்கா… காங்கிரஸ் ஷாக்!

பா.ஜ.க.வில் பிரியங்கா… காங்கிரஸ் ஷாக்!

Share it if you like it

காங்கிரஸ் துணைப் பொதுச் செயலாளர் பிரியங்கா, பா.ஜ.க.வில் இணைந்திருப்பதால் அக்கட்சியினர் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘நான் பெண்… நான் போராடுவேன்’ என்கிற முழக்கத்துடன் பெண்கள் மட்டும் பங்கேற்கும் பேரணி நடைபெற்று வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோனியா காந்தியின் மகளும், உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெற்று வருகிறது. இடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த பேரணி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆகவே, மேற்படி பேரணிக்கு மீண்டும் புத்துயிரூட்டப்பட்டிருக்கிறது. அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் மேற்படி பேரணி தொடர்பாக காங்கிரஸ் சார்பில் பல்வேறு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இப்படி வெளியிட்டப்பட்ட அட்டைப்பட விளம்பரங்களில் உத்தரப்பிரதேச மாநில மகிலா காங்கிரஸ் துணைப் பொதுச்செயலாளர் பிரியங்கா மவுரியாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து, பிரியங்கா மவுரியா உத்தரப்பிரதேச அரசியலில் பெரிய அளவில் பேசுபொருளாக மாறி வந்தார். ஆகவே, அவருக்கு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலில் போட்டியிட பிரியங்கா மவுரியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் பேரணியின் முகமாக இருந்த பிரியங்கா மவுரியா பா.ஜ.க.வில் இணைந்திருப்பது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.


Share it if you like it