கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அக்ஷயந்தா ஸ்ரீ ஹரேகா ஹஜப்பா அவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கெளரவப்படுத்தியுள்ளது.
பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தேசத்திற்கும், சமூகத்திற்கும், உண்மையாக உழைக்கும் நபர்களை அடையாளம் கண்டு, நாட்டின் உயரிய விருதுகளை வழங்கி இன்று வரை பெருமைப்படுத்தி வருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-காரமடை அருகே உள்ள தேவனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள். 103 வயதிலும் இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கும் இவரை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசு அண்மையில் பத்மஸ்ரீ விருது கொடுத்து பெருமைப்படுத்தியது.
பாப்பம்மாள் பாட்டி தி.மு.க-வின் தீவிர ஆதரவாளராக இருந்தாலும். சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவர்களை போன்றவர்களை அடையாளம் கண்டு சிறப்பிப்பதே மோடி தலைமையிலான அரசின் நோக்கம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இதனை தொடர்ந்து தட்சிண கன்னடாவைச் சேர்ந்த சமூக சேவகர் அக்ஷயந்தா ஸ்ரீ ஹரேகா ஹஜப்பா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருதை கொடுத்து அவரின் தியாகத்தை உலகத்திற்கு தெரிவித்துள்ளது மோடி அரசு. தெரு, தெருவாக, ஆரஞ்சு பழங்களை விற்பனை செய்து, அதன் மூலம் வரும் பணத்தில் சொந்தமாக பள்ளி கூடம் ஒன்றினை கட்டி, ஏழை குழந்தைகளுக்கு கல்வியை கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிற்கு விரோதமாகவும், பிரிவினையை தூண்டும் வகையில், பேசும், எழுதும், நபர்களுக்கு நாட்டின் மிகப் பெரிய விருதினை கொடுத்து பெருமைப்படுத்தி வந்த காங்கிரஸ் அரசு போல் அல்லாமல், நேர்மையானவர்களுக்கு மோடி அரசு விருது வழங்கி வருவது பாராட்டுக்குறியது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.