முஸ்லீம் லீக் மதச்சார்பற்ற கட்சி… ராகுல் காந்தி ‘அடடே’!

முஸ்லீம் லீக் மதச்சார்பற்ற கட்சி… ராகுல் காந்தி ‘அடடே’!

Share it if you like it

சர்வதேச பத்திரிகையாளர்கள் மத்தியில், முஸ்லீம் லீக் ஒரு மதச்சார்பற்ற கட்சி என்று ராகுல் காந்தி கூறியிருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யாக இருந்த இவர், மோடி சமூகத்தைப் பற்றி அவதூறாகப் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், பதவியை இழந்ததார். இந்த சூழலில், அமெரிக்காவுக்கு 6 நாள் சுற்றுப் பயணம் சென்றிருக்கிறார் ராகுல் காந்தி. கடந்த மாதம் 30-ம் தேதி சான்ஃபிரான்சிஸ்கோவுக்குச் சென்றடைந்த ராகுல் காந்தி, கலிஃபோர்னியாவின் சான்டா கிளாராவில் இந்திய புலம்பெயர்ந்தோர் கூட்டத்தில் உரையாற்றினார்.

தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் ராகுல் காந்தி, நேற்று வாஷிங்டன் டி.சி-யில் சர்வதேச செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சீனா விவகாரம், தகுதி நீக்கம், உக்ரைன் ரஷ்ய விவகாரத்தை காங்கிரஸ் எப்படி கையாண்டு இருக்கும், இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை உள்ளிட்ட செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். அப்போது, கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் (ஐ.யூ.எம்.எல்.) காங்கிரஸ் கூட்டணி குறித்து ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குத்தான், முஸ்லீம் லீக் முற்றிலும் மதச்சார்பற்ற கட்சி என்று கூறியிருக்கிறார் ராகுல் காந்தி.

இதுதான் பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது. முஸ்லீம் லீக் என்பது முஸ்லீம்களுக்கான கட்சி. பெயரிலேயே முஸ்லீம் இருக்கிறது. தவிர, இக்கட்சியில், வேறு சமூகத்தைச் சேர்ந்த யாரும் உறுப்பினர்களாகக் கூட இருக்க முடியாது. அப்படி இருக்கையில், முஸ்லீம் லீக் கட்சி மதச்சார்பற்ற கட்சி என்று ராகுல் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.


Share it if you like it