வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்பி வரும் திருமா, சீமான், உள்ளிட்டவர்களுக்கு புரியும் விதத்தில் மிக தெளிவாகவும், ஆழமாகவும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியிருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வடமாநில தொழிலாளர்கள் தமிழகம் வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், அவர்களின் வருகை குறித்து தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இக்கட்சியின், வன்மம் நிறைந்த பேச்சால் தமிழகத்தில் ஒருவித பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி வடமாநில தொழிலாளர்கள் குறித்து, வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன் தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் ANTI BIKILI என குறிப்பிட்டு இருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அப்போது, வட மாநில தொழிலாளர்கள் குறித்து நிருபர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
இதற்கு, பா.ஜ.க. தலைவர் மிக தெளிவாகவும், விளக்கமாகவும் பதில் அளித்துள்ளார். மேலும், பிரிவினையை தூண்டும் சீமான், திருமாவளவன் உள்ளிட்டவர்களுக்கு புரியும் விதத்தில் தக்க பதிலடியை அவர் கொடுத்து இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.