அரசியல் மாண்பு: ஜெயகல்யாணிக்கு பா.ஜ.க. தலைவர் சொன்ன பதில்!

அரசியல் மாண்பு: ஜெயகல்யாணிக்கு பா.ஜ.க. தலைவர் சொன்ன பதில்!

Share it if you like it

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர் பாபு. இவரது, மகள் ஜெயகல்யாணி. இவர், சதீஸ்குமார் என்பவரை தனது பெற்றோரின் கடும் எதிர்ப்பினையும் மீறி திருமணம் செய்து கொண்டார். எனினும், அமைச்சர் சேகர் பாபு தங்களுக்கு தொடர்ந்து பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருவதாக ஜெயகல்யாணி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கண்ணீர் மல்க பேட்டியளித்திருந்தார். அதுகுறித்தான, காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெயகல்யாணி தம்மிடம் முறையிட்டது குறித்தும், அதற்குதான் அளித்த பதிலையும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it