Share it if you like it
தமிழ பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையைச் சேர்ந்த சகோதரி என்.முத்தமிழ்ச்செல்வி, எவரெஸ்ட் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பித்த சகோதரிக்கு, தமிழக பா.ஜ.க. சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Share it if you like it