கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நியமனம் குறித்து பிரபல யூடியூபர் புதிய தகவல் ஒன்றினை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவரது, தலைமையின் கீழ் அக்கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தின், ஒரே இளம் அரசியல் தலைவராக இவர் மட்டுமே உள்ளார் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. இவரது, பேச்சு மற்றும் எழுத்துக்கள் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. அந்த வகையில், இளம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்று கட்சியை சேர்ந்த தலைவர்கள் கூட அண்ணாமலையின் தலைமையை விரும்பி அக்கட்சியில் தங்களை தொடர்ந்து இணைத்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான், பிரபல யூடியூபர் ராஜவேல் நாகராஜன் அண்மையில் இவ்வாறு கூறியிருந்தார் ; அண்ணாமலையை தவிர்த்து விட்டு இனி அரசியல் செய்ய முடியாது. அந்த இடத்தை விட்டுக் கொடுக்க, அவர் தயாராக இல்லை. இனி, அவரோடு இணைந்தோ அல்லது அவரை எதிர்த்தோ தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை கடந்த, ஒரு வருடத்திற்குள் அவர் உருவாக்கி விட்டார். நீங்கள் அவரை விமர்சனம் செய்யலாம். கிண்டல் செய்யலாம். மக்கள் அவரை எப்படி? பார்க்கிறார்கள், என்னவாக பார்க்க விரும்புகிறார்கள் என்பதை காலம் சொல்லும் என குறிப்பிட்டு இருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில் தான், ராஜவேல் நாகராஜன் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அக்காணொளியில் அவர் கூறியதாவது ; கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சாதாரண நிகழ்வு அல்ல. 38 வயது உடைய நபருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. பா.ஜ.க. வரலாற்றில் இல்லாத ஒரு சிறப்பு அண்ணாமலைக்கு அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும் சமயத்தில் முதல்வரை தேர்வு செய்யும் இடத்தில் அவர் முக்கிய இடத்தில் உள்ளா என புது தகவலை ராஜவேல் நாகராஜன் கூறியுள்ளார்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.