தி.மு.க அரசிற்கு எதிராக போராட்டம் பா.ஜ.க தலைவர் அழைப்பு..!

தி.மு.க அரசிற்கு எதிராக போராட்டம் பா.ஜ.க தலைவர் அழைப்பு..!

Share it if you like it

முல்லை பெரியாறு அணையில் கேரள அரசு தன்னிச்சையான முடிவு..

முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை விடியல் அரசு கேளரளாவிடம் இழந்த சம்பவம். தேனி விவசாயிகள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குறித்து எல்லாம் கவலை கொள்ளாமல், தி.மு.க அரசு மக்களை திசை திருப்பும் முயற்சியிலேயே இன்று வரை தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது என்பது திண்ணம்.

தேனி மக்களின் உரிமையில் விழுந்து இருக்கும் இந்த மிகப் பெரிய அடியை கண்டித்தும், மெத்தனமாக செயல்பட்ட தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை கண்டித்தும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை மிகப் பெரிய போராட்டம் நடைப்பெற உள்ளதாக பா.ஜ.க தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்து உள்ளது.


Share it if you like it