நீட் தேர்வு எதிர்ப்பு அரசியல் – தேசிய அளவில் அவமதிக்கப்படும் தமிழக மாணவர்கள் – திருந்தாத தமிழக அரசியல்

நீட் தேர்வு எதிர்ப்பு அரசியல் – தேசிய அளவில் அவமதிக்கப்படும் தமிழக மாணவர்கள் – திருந்தாத தமிழக அரசியல்

Share it if you like it

இந்திய மருத்துவ கழகம் சார்பில் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை நிர்ணயிக்கும் நீட் தகுதி தேர்வு நடத்துகிறது. பாரபட்சம் இன்றி நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் எந்த வேறுபாடும் இன்றி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை இருக்கை பெற முடியும் . அந்த வகையில் மருத்துவக் கல்லூரியே இல்லாத ஒரு மாநிலத்தில் இருக்கும் ஒரு மாணவனும் மருத்துவக் கல்லூரியில் பயில முடியும். அதே நேரத்தில் இந்த நீட் தேர்வில் வெற்றி பெறாத ஒரு மாணவனால் அவன் அந்த மருத்துவக் கல்லூரியின் நிறுவனரின் மகனாக இருக்கும் பட்சத்தில் கூட மருத்துவ கல்வி சேர்க்கையை பெற முடியாது என்ற வகையில் நீட் தேர்வில் எடுக்கப்படும் தரவரிசை முன்வைத்து உயிர்காக்கும் மருத்துவத் தொழிலை தகுதியும் திறமையும் இருக்கும் மாணவர்கள் மட்டுமே இடம்பெற முடியும் . அந்த வகையில் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைகள் அனைத்திலும் உயிர்காக்கும் மருத்துவத் தொழிலில் எதிர்காலத்தில் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவர்களாக பரிமளிக்க முடியும் என்ற உறுதிப்பாட்டின் மூலம் இந்திய மருத்துவத்தை சர்வதேச மருத்துவ தரத்திற்கு உயர்த்தும் ஒரு உன்னதமான முயற்சியை மேற்கொண்டது.

2013 ல் இந்த நீட் தேர்வு அமலாக்கப்படும் போது மத்திய அரசு இந்த நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்தது. அதை முழுமையாக ஆதரித்தது. அதன் பிறகு வந்த அதிமுக அரசு தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு வேண்டும் என்று முயற்சித்தது . எனினும் மாணவர்களின் நீதிமன்ற நாடுகையால் அந்த விலக்கும் பின் நாளில் சாத்தியம் இல்லாமல் போனது. ஒரே நாடு ஒரே கல்வி என்ற அளவில் உச்ச நீதிமன்றம் நீட் என்னும் தகுதி தேர்வை நாடு முழுமைக்கும் பாரபட்சம் என்று முன்னெடுப்பதே சரியானதாக இருக்கும் என்று வழக்கை முடித்து வைத்தது.

ஆனால் அந்த அதிமுக ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களை திசை திருப்பி அரசியல் ஆதாயம் தேடத் தொடங்கிய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த நீட் தேர்வை வைத்து பெருமளவில் குழப்ப அரசியலை செய்ய தொடங்கியது. நீட் தேர்வை ரத்து செய்ய போகிறோம் என்ற கோஷத்தோடு மாணவர்களை தவறாக வழிநடத்தியது. உச்ச நீதிமன்றம் வரையில் போய் வழக்காடி வழக்கில் தோற்ற ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட விஷயத்தில் அந்த மரணத்தை முன்வைத்து நீட் தேர்வுக்கு எதிராக பிண அரசியலை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் செய்ய தொடங்கியது.

எந்த நீட் தேர்வை காங்கிரஸ் கட்சியில் முன் நின்று திமுக கொண்டு வந்ததோ ? அதே நீட் தேர்வை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி நாடு முழுவதும் அமல் செய்த பாஜக அதிமுக கூட்டணியை எதிர்த்து தமிழகத்திலும் தேசிய அளவிலும் பாஜகவை எதிர்த்து நீட் எதிர்ப்பு என்ற கோஷத்தையும் முன்வைத்தது. நாடு முழுவதிலும் வேறு எந்த மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக அல்லது தேர்வு முடிவை ஒட்டி நடக்கும் விரும்பத் தகாத விஷயங்களை வைத்து போராட்ட அரசியல் இல்லாத நிலையில் தமிழகத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வும் அதன் தேர்வு முடிவுகளும் அதை ஒட்டி நிகழும் விஷயங்களும் ஒவ்வொரு வருடமும் அரசியலாக்கப்படுகிறது.

மறுபக்கம் ஆரம்ப காலத்தில் தவறான வழிகாட்டுதலாலும் விஷம பிரச்சாரங்களாலும் தமிழக மாணவர்கள் சற்றே தடுமாறினாலும் சில ஆண்டுகளில் நீட் தேர்வு எந்த காலத்திலும் திரும்ப பெறப்படாது. அதே நேரத்தில் அந்த நீட் தேர்வின் மூலம் தான் தங்களின் மருத்துவ சேர்க்கை நுழைவும் இருக்கையும் கட்டண கொள்ளை இல்லாமல் அடைவதற்கான திறவுகோலாக இருக்கும் என்பதை புரிந்து கொண்ட தமிழக மாணவர்கள் தங்களின் சொந்த திறமையிலும் உழைப்பிலும் நீட் தேர்வை எதிர்கொள்ள தயாரானார்கள். அதன் பலன் சர்வதேச பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் அரசு பள்ளியில் தமிழ் வழி படித்து வரும் மாணவர்கள் கூட போட்டியிட்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ சேர்க்கையை பெறு தொடங்கினார்கள்.

மறுபுறம் தேசிய அளவிலும் மாநில அளவிலும் தரவரிசை பட்டியலில் முன்னேறி சாதிக்கத் தொடங்கினார்கள்.

ஆனால் திரும்பிய பக்கம் எல்லாம் மருத்துவ கல்லூரிகள் அதன் கல்வித் தந்தைகள் எல்லாம் தங்களின் கட்சிக்கு நிதி ஆதாரம் தரும் அரசியல் மூலங்கள் என்பதால் பணம் கொழிக்கும் அட்சய பாத்திரமாக இருந்த மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு நீட் தகுதி தேர்வு என்ற ஒற்றை அஸ்திரம் கொண்டு டிஜிட்டல் முறை கண்காணிப்பு மற்றும் தேசிய அளவிலான கட்டுப்பாட்டில் நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவ சேர்க்கை நடைமுறைகள் என்று முழுமையாக நேரடியான பல கண்காணிப்பிற்கு கொண்டுவரப்பட்டதால் பல கோடி கோடி கட்டண கொள்ளை மதிப்பெண் குறைவாக பெற்று இருந்தாலும் கூட பல கோடிகள் விலையில் விற்கப்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி சேர்க்கைகளும் காலாவதியாகி அரசு நீட் தேர்வின் மூலம் வெளியிடும் தரவரிசை பட்டியலில் மட்டுமே மாணவர் சேர்க்கை என்ற காரணத்தால் தங்களின் கோடிக்கணக்கான வருமானமும் மறுபுறம் அதை வைத்து செய்த அரசியல் வியாபாரமும் ஒரு சேர பாழானதில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் களம் காண்கிறது.

எந்த நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள முடியாது என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்களோ ? அதே தமிழகத்தில் கடைகோடி கிராமத்தில் இருக்கும் ஏழை மாணவனும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத மலை கிராம பெண் குழந்தையும் அனாவசியமாக எதிர்கொண்டு தங்களின் திறமையின் மூலம் மருத்துவ கனவை சாதிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ கனவை எட்டிப் பிடிக்க முடியாமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வேறு ஒரு துறையில் நுழைந்தவர்கள் கூட தற்போதைய நீட் தேர்வின் மூலம் முயற்சி செய்து தங்களின் மருத்துவ கனவை நிறைவேற்றி வருகிறார்கள். ஆனால் இதை எல்லாம் உதாசீனப்படுத்தி தொடர்ச்சியாக தமிழகத்தில் நீட் எதிர்ப்பு அரசியல் தொடர்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை திரும்ப பெற செய்வோம் என்று செய்ய முடியாத விஷயத்தை ஒரு பொய்யான வாக்குறுதியாக கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அந்த நீட் எதிர்ப்பு ரகசியம் பொய்த்து போன நிலையில் தங்களின் பொய் முகம் கேள்விக்குறியாகும் முன்பு அதை நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் என்று வழக்கமான ஏமாற்று அரசியலை செய்கிறார்கள். உண்மையில் எங்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது என்று மாணவர்கள் சொல்வார்களேயானால் அதற்கு பள்ளிக் கல்வித் துறை தான் முதல் பொறுப்பு . ஒரு தேசிய அளவிலான தகுதி தேர்வை கூட எதிர்கொள்ளும் அளவில் மாணவர்களை தயார் செய்ய முடியவில்லை எனில் மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறையும் பாடநூல் கழகமும் தோற்றுவிட்டதாகவே அர்த்தம் . அதன் கட்டமைப்புகளும் நிர்வாகமும் முழுமையாக சீர் செய்யப்பட வேண்டும் என்பதே உண்மை.

மறுபுறம் அரசு பள்ளி மாணவர்களால் நீட் தேர்வை எதிர் கொள்ள முடியாது என்று அரசு சொல்லும் எனில் அத்தகைய தகுதித் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையிலான திறமையான ஆசிரியர்களை தமிழக அரசு நியமிக்கவில்லை என்பதே உண்மை. அதற்கும் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அப்படியானால் ஆசிரியர் தகுதி தேர்வு என்ற வகையில் தமிழக அரசு மாநில பள்ளி துறையும் இணைந்து நடத்தும் தகுதி தேர்வு எந்த அடிப்படையில் ஆனது அதன் நோக்கம் இலக்கு மாணவர்கள் பன்முகத் திறமை சார்ந்ததில்லையா?இல்லை எனில் அந்த ஆசிரியர் தகுதி தேர்வு எதற்காக யாருக்காக .

இப்படி எல்லா வகையிலும் தங்களின் பக்கம் குறைகளை வைத்துக்கொண்டு மாநில அரசு மாணவர்களை இன்னும் தவறாக வழி நடத்துவதும் அவர்களின் தன்னம்பிக்கை திறமையை மழுங்கடிக்கச் செய்யும் வகையிலாக நீட் தேர்வை தமிழக மாணவர்களால் எதிர்கொள்ள முடியாது. நீட் தேர்வு இருந்தால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு கைகூடாது நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு மட்டும் விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையால் தேசிய அளவில் தமிழகத்தின் தன்மானத்தையும் மற்ற மாநில மாணவர்கள் இடையே தமிழக மாணவர்களின் தன்னம்பிக்கை திறமை உழைப்பு தகுதி என்று அனைத்தையும் தனது அரசியல் சுயலாபத்திற்காக அவமதிக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து தங்களின் மாணவர்களை பெற்றோர்கள் நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சிகள் உள்ளிட்ட திறனாய்வுக்கு அவர்களாகவே முயற்சி செய்த போதிலும் பல இடங்களில் எந்த கூடுதல் பயிற்சியும் முயற்சியும் இல்லாமலேயே நான் நீட் தேர்வு எதிர்கொண்டு எனது மருத்துவ சேர்க்கையை பெற்று விட்டேன் என்று மாணவர்கள் சாதித்து காட்டியும் வருகிறார்கள்.

எந்த நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசியல் மாணவர்களை குழப்பி ஆதாயம் பார்க்கிறதோ ? அதே தமிழகத்தில் தான் நீட் தேர்வில் நூற்றுக்கு நூறு சதம் மதிப்பெண்களை பெற்ற ஒரு மாணவனும் இருக்கிறான் ஆனால் அந்த மாணவனை முன் உதாரணமாக காட்டி மற்ற மாணவர்களை நம்பிக்கையோடு நீட் தேர்வு எதிர்கொள்ள வழி காட்ட வேண்டிய அரசும் மாநில பள்ளி துறையும் இன்னமும் கூட நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் நீட் இருந்தால் தமிழக மாணவர்களால் மருத்துவராக முடியாது என்று பேசுவது அவர்களின் கையாலாகாத தனமன்றி தமிழக மாணவர்களின் திறமையின்மை அல்ல.

தமிழகத்தில் மாநில அரசு சார்பிலான எந்த ஒரு பணிக்கும் தகுதி தேர்வு அல்லது பல கட்ட நேர்முகமோ இல்லாமல் பணி ஆணை பெற முடியாது . இந்த நீட் தேர்வை எதிர்க்கும் அத்தனை அரசியல் கட்சிகளிலும் அவர்களது கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கென்று பலகட்ட நேர்முகமும் பல கட்ட ஆய்வுகளும் இல்லாமல் யாரும் தேர்வாகி விட முடியாது. இந்த நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்கும் கல்வியாளர்கள் என்ற போர்வையில் இருக்கும் மருத்துவக் கல்வி வியாபாரிகளும் அவர்களது எந்த ஒரு கல்லூரியிலும் நுழைவு தேர்வு அல்லது பல கட்ட நேர்முகம் இல்லாமல் எந்த ஒரு மாணவனுக்கும் வேறு எந்த ஒரு கல்வி சேர்க்கைக்கும் கூட இருக்கை ஒதுக்குவது இல்லை.

நீட் தேர்வுக்கு எதிராக பேசும் ஊடகங்களும் இதை அரசியலாகும் சமூக ஆர்வலர்கள் போர்வையில் இருக்கும் போலி போராளிகளும் கூட அவரவரின் பணிக்கு வருவதற்கு பல கட்ட நேர்காணலும் தேர்வுகளும் கடந்து தான் வந்திருக்கிறார்கள். என்பதை எதார்த்த உண்மை. உண்மை நிலை இப்படி இருக்க உயிர்காக்கும் மருத்துவ கல்விக்கு ஒரு நுழைவுத் தேர்வை வைப்பதை மட்டும் எதிர்ப்பதும் அதை தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு வேண்டும் என்று கேட்பதும் அவர்களின் கட்டண கொள்ளை சுய லாபம் என்ற சுயநலமின்றி வேறல்ல.

தற்போது கூட நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் குறைவான மதிப்பெண்களை உடைய மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை கிடைக்கப் பெற்றால் அவர்கள் பல லட்சங்களை கட்டணமாக செலுத்தும் துரதிருஷ்ட நிலையே நீடிக்கிறது . ஆனால் அதனால் மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்கொள்ளும் பொருளாதார இடர்பாடுகளை பற்றி இங்கு யாருக்கும் கவலை இல்லை. அந்த பல லட்சங்களை செலுத்த முடியாத காரணத்தால் தகுதியும் திறமையும் இருந்தும் கூட மருத்துவ கல்வியில் சேர முடியாமல் வேறு ஏதோ ஒரு வாய்ப்பை தேடி போகும் மாணவர்களின் வாய்ப்புகள் பறிபோவதை பற்றி இங்கு யாருக்கும் அக்கறை இல்லை.

இந்த நீட் தேர்வு வருவதற்கு முன்பு பல ஆண்டுகள் மருத்துவரின் மகன் மகள் அல்லது பெரும் முதலாளிகளின் மகன் மகள் பெரும் வசதி வாய்ப்பு இருந்தால் போதும் பிளஸ் டூ தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் இருந்தால் கூட கால் கோடி அரை கோடி நன்கொடையாக தந்தார் மருத்துவ சேர்க்கை பெற்று விட முடியும். அவர் மருத்துவராகி விட முடியும் என்ற அவல நிலையை மாற்றி அமைத்த தகுதியும் திறமையும் இருக்கும் ஒரு ஏழை மாணவனுக்கும் மருத்துவக் கல்வி சாத்தியம். தகுதியும் திறமையும் இல்லாவிட்டால் எவராயினும் மருத்துவத்தில் கால் பதிக்க முடியாது என்ற உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் நீட் தேர்வுக்கு எதிராக இவ்வளவு பேர் ஒன்று கூடி குரல் கொடுப்பார்கள் எனில் இது அவர்களின் அரசியல் ஆதாயம் அல்லது தங்களின் பொருளாதார சுய லாபம் அன்றி மாணவர்கள் மீதான அக்கறை அல்ல.

இதே கட்சிகளும் அரசியல் அமைப்புகளும் தேசிய அளவில் இருக்கும் அத்தனை நுழைவு தேர்வுகளையும் அல்லது தகுதி தேர்வுகளையும் எதிர்த்து குரல் கொடுப்பார்கள் எனில் அது ஒரு வகை அல்லது மாநில அளவில் இருக்கும் தகுதி தேர்வுகளையும் நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று மாநில அரசை எதிர்த்து குரல் கொடுப்பார்கள் எனில் அதுவும் ஒரு வகை ஆனால் இது இரண்டையும் செய்யாமல் மருத்துவ கல்வி என்ற பெயரிலான கட்டண கொள்ளை தடுத்து நிறுத்திய நீட் தேர்வுக்கு மட்டும் எதிராக குரல் கொடுப்பார்கள் எனில் அந்த நீட் தேர்வுக்கு மட்டும் விலக்கு வேண்டும் என்று கேட்பார்கள் எனில் இந்த கோரிக்கையை அவர்களின் பின்னிருக்கும் சுயநலம் கட்டண கொள்ளை என்ற விஷயத்தின் ஆதரவு நிலைப்பாடு தான் என்பதற்கு சாட்சியம் .

இவ்வளவு கூட்டம் கூடி உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் என்று அரசியல் களத்தை தகிக்க செய்யும் இந்த நீட் எதிர்ப்பாளர்கள் எல்லாம் இதே மாநில அரசிடம் முதலில் மாநில அரசுப் பணிகள் உள்ளிட்ட எந்த ஒரு விஷயத்திற்கும் மாநில அளவில் தகுதி தேர்வு நுழைவுத் தேர்வு கிடையாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வாருங்கள் என்று கேட்க மாட்டார்கள். அவர்கள் கேட்டாலும் மாநில அரசு அதை செய்யாது. ஆனால் இவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நீட் தேர்வை விலக்கிக் கொள்ள வேண்டும் அல்லது தமிழகத்திற்கு மட்டும் விலக்கு தர வேண்டும் என்பது எப்படிப்பட்ட வேடிக்கை.

ஆக இவர்களின் நோக்கம் ஒன்றுதான். மருத்துவ கல்வி என்பது பல ஆண்டுகளாக கட்டளை கொள்ளை வியாபாரமாக இருந்ததில் இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வசதி படைத்தவர்கள் மட்டும்தான் மருத்துவராக முடியும் தகுதி திறமை இருந்தால் கூட பொருளாதார வசதி இல்லாதவர்கள் மருத்துவராக முடியாது என்ற அவலம் நீடித்த போது அதில் இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தேசம் முழுவதும் தகுதியான மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர முடியும் எதிர்காலத்தில் உயிர் காக்கும் மருத்துவத் தொழிலில் தகுதியும் திறமையும் மட்டுமே இடம்பெற முடியும் என்ற உறுதியை முன்னெடுக்கும் நீட் தேர்வை மட்டும் இவர்கள் எதிர்த்து குரல் கொடுப்பார்கள் எனில் விலக்கப்பட வேண்டியது நீட் தேர்வு அல்ல. அரசியல் களத்தில் இருந்தும் கட்சி அமைப்புகள் சமூக அளவில் இருந்தும் விலக்கப்பட வேண்டியது விலக்கி வைக்கப்பட வேண்டியது இந்த நீட் எதிர்ப்பாளர்கள் மட்டுமே.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவோம். அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழகம் முழுவதிலும் நீட் எதிர்ப்பு என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். எந்த காலத்திலும் நீட் தேர்வுக்கு விலக்கு வராது. நீட் தேர்வை திரும்பப் பெறவும் மாட்டார்கள் என்பதை தேசிய கல்வியாளர்கள் மாநில கல்வியாளர்கள் வழக்கறிஞர்கள் இந்திய மருத்துவர் கழகத்தின் நடைமுறைகள் தெரிந்தவர்கள் என்று எத்தனையோ பேர் பலமுறை தெளிவாக எடுத்துரைத்த பின்னரும் தொடர்ச்சியாக இந்த நீட் எதிர்ப்பு என்ற பெயரில் தமிழக மாணவர்களை அரசியல் பகடையாக தவறாக வழி நடத்துகிறார்கள்.

இவர்களின் இந்தப் பொய் முகங்களையும் இவர்களுக்கு பின்னால் நீட் எதிர்ப்பு என்ற பெயரில் இருக்கும் சூழ்ச்சி அரசியலையும் உணர்ந்து கொண்டு தமிழக மாணவர்களும் பெற்றோர்களும் சுதாரிப்பாக இருந்து கொள்வது உத்தமம். நீட் தேர்வு என்பது அவர்களின் மருத்துவ கனவை உறுதி செய்யும் ஒரு நுழைவு வாயில் என்பதை உணர்ந்து அதற்கு முயற்சிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் மருத்துவம் மட்டுமே வாய்ப்பு அல்ல அது சார்ந்த ஏராள வாய்ப்புகள் இருக்கிறது என்று தங்களுக்கு உரிய துறைகளில் திறமையை முன்னிறுத்தி பிரகாசிக்கவும் எதிர்காலத்தில் தங்களை எந்தவித போட்டிக்கும் தயாராகும் வகையில் எந்த தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் நிலைநிறுத்திக் கொள்வதும் அவர்களின் நலனுக்கும் எதிர்காலத்திற்கும் உகந்ததாக இருக்கும். மாறாக இந்த நீட் எதிர்ப்பு அரசியல் என்ற சூழ்ச்சியில் சிக்கி அவர்களை நம்பி பின் செல்லும் பட்சத்தில் மாணவர்களின் கல்வியும் அவர்களின் எதிர்காலமும் பாழாவதோடு ஒட்டுமொத்தமாக தமிழக மாணவர்களுக்கும் தமிழகத்தின் கல்வி தரத்திற்கும் தேசிய அளவில் பெரும் பின்னடைவும் அவமதிப்பு வந்து சேரும் என்பதே உண்மை.


Share it if you like it