கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருணன் தெரிவித்து இருக்கும் கருத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியில் புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இதனை, பாரதப் பிரதமர் மோடி எதிர்வரும் மே -28 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தால் அவரது செல்வாக்கு மேலும் உயரும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடிக்கு இந்த நற்பெயர் கிடைத்து விட கூடாது என எதிர்க்கட்சிகள் இன்று வரை பல்வேறு கட்டுக்கதைகளை நாட்டு மக்களிடம் பரப்பி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சீமானின் முழுமையான அன்பினையும், பாராட்டினையும் பெற்ற அருணன் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ; குடியரசுத் தலைவர் முர்மு பழங்குடியினப் பெண் என்பதோடு விதவை என்பதாலும் நாடாளுமன்ற கட்டட திறப்பு எனும் புனித விழாவிற்கு அழைக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. சங்கிகள் மநுவாதிகள்; அவர்கள் மாதர்களை அவமதித்தால் அதில் ஆச்சரியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
திரெளபதி முர்மு பழங்குடியினத்தை சேர்ந்தவர், விதவை பெண்மணி என்பது எல்லாம் அருணன் போன்ற அறைவேக்காடுகளுக்கு இப்போதுதான் தெரியுமா?. அவர் ஜனாதிபதி தேர்தலில் நின்ற போது அவரை கம்யூனிஸ்ட்கள் ஏன் ஆதரிக்கவில்லை. பிரதமர் மோடி மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு அருணின் இந்த அருவருக்கதக்க பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.