லவ் ஜிகாத்: ஹிந்து பெண் கடத்தல்; ஜஹிதுல் எஸ்கேப்!

லவ் ஜிகாத்: ஹிந்து பெண் கடத்தல்; ஜஹிதுல் எஸ்கேப்!

Share it if you like it

அஸ்ஸாமில் ஹிந்து பெண்ணை லவ் ஜிகாத் வலையில் வீழ்த்தி, கடத்திச் சென்ற 2 குழந்தைகளின் தந்தையான குரோக் ஜஹிதுலை போலீஸார் தேடிவருகின்றனர்.

அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார் மாவட்டம் துலியாஜன் பகுதியைச் சேர்ந்த புகழ்பெற்ற வணிகக் குடுத்தில் பிறந்தவர் சோனாலி (பெயர் மாற்றம்). இவரது தந்தை அப்பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்திருக்கிறார். இக்கடைக்கு அடிக்கடி பொருட்கள் வாங்கச் சென்று வந்திருக்கிறார் குரோக் ஜஹிதுல் அலி என்கிற முஸ்லீம் வாலிபர். சில சமயங்களில் கடையில் தந்தை இல்லாத சமயங்களில் கல்லா பெட்டியில் சோனாலி அமர்ந்திருப்பது வாடிக்கையாக இருந்தது. இந்த சூழலில், ஜஹிதுல் அலி கடைக்குச் சென்றபோது தன்னை ஒரு கொத்தனார் என்றும், திருமணமாகாத ஹிந்து என்றும் பொய் சொல்லி இருக்கிறான்.

இப்படி ஜஹிதுல் அடிக்கடி கடைக்குச் சென்று வந்த நிலையில், சோனாலியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, லவ் ஜிகாத் என்கிற காதல் வலையில் சோனாலியை வீழ்த்தி இருக்கிறான் ஜஹிதுல் அலி. ஆனால், சோனாலி ஒரு மைனர் சிறுமி. இந்த சூழலில், கடந்தாண்டு டிசம்பர் 31-ம் தேதி ஆசைவார்த்தை கூறி, சோனாலியை கடத்திச் சென்றிருக்கிறான் ஜஹிதுல் அலி. மகளை காணாதது கண்டு, அவரது தந்தை ஜனவரி 1-ம் தேதி துலியாஜன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். அப்போது, கொத்தனார் ஜஹிதுல் அலி கடத்திச் சென்றது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜஹிதுல்லின் உறவினர் திப்ருகார் நகரைச் சேர்ந்த பதியுல் ஜமால் என்பவரை போலீஸார் ஜனவரி 4-ம் தேதி கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், தானும் தனது சகோதரர் ஜஹிதுல் அலியும் இணைந்து டிசம்பர் 31-ம் தேதி சிறுமியை பேருந்தில் இருந்து கடத்திச் சென்றதாக வாக்குமூலம் அளித்தார். இதனிடையே, போலீஸ் தன்னை தேடுவதை அறிந்ததும், ஜஹிதுல் சிறுமியை போங்கைகான் மாவட்டத்திறகு அழைத்துச் சென்று, கடந்த 3 நாட்களாக தனது மாமா வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறான். இதுகுறித்து போங்கைகான் போலீஸார் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, போங்கைகான் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர், ஜஹிதுல் மாமா வீட்டில் இருந்து சிறுமியை மீட்டனர். ஆனால், லவ் ஜிகாதி ஜஹிதுல் அலி தலைமறைவாகி விட்டான். அவனை பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடத்தப்பட்ட சிறுமியை வெற்றிகரமாக மீட்ட அஸ்ஸாம் போலீஸாருக்கு அம்மாநில முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பாராட்டுத் தெரிவித்தார்.


Share it if you like it