அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் நாயன்மார்கள் சிலைகள் உடைப்பு, கொள்ளை முயற்சியால் பரபரப்பு!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் நாயன்மார்கள் சிலைகள் உடைப்பு, கொள்ளை முயற்சியால் பரபரப்பு!

Share it if you like it

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. நகரின் மத்தியில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் இக்கோயிலில், சமீபத்தில்தான் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. இந்த நிலையில், நேற்று இரவு அர்ச்சகர்கள் பூஜையை முடித்து கோயில் நடையை சாத்திவிட்டு சென்றனர். இன்று காலை வழக்கம்போல் நடையை திறக்க வந்தபோதுது, கோயிலில் பொருட்கள் கலைந்து சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

மேலும், அவிநாசிலிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் பிரதான கருவறையில் லிங்கத்தின் மேல் உள்ள மிகவும் கனமான தாராபாத்திரத்தை திருட முயற்சி நடந்திருந்தது தெரியவந்தது. எனினும், அதை கழற்ற முடியாததால் தப்பித்தது. ஆத்திரத்தில், பிரதான கருவறையை சுற்றியுள்ள 63 நாயன்மார்களின் உடை வஸ்திரங்கள், சிறு கலசங்களை உடைத்திருக்கிறார்கள். அதேபோல் கோயில் உண்டியலையும் திருடர்கள் அசைத்துப் பார்த்திருக்கிறார்கள். மேலும், சுப்பிரமணியர் சன்னதியில் வேல், சேவல் கொடி ஆகியவையும் களவாடப்பட்டிருக்கின்றன. முழுமையான விசாரணைக்கு பிறகே என்னென்ன பொருட்கள் திருடு போயுள்ளன என்பது தெரியவரும்.

தகவலறிந்து வந்த அவிநாசி போலீஸார் கோயிலில் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆராயப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஒருவரை போலீஸார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். அவிநாசி நகரின் மத்தியில் அமைந்திருக்கும் பிரபலமான கோயிலில் திருட்டு சம்பவம் நடந்திருப்பது பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். அரிய பொருளான அவிநாசியப்பர் கோவிலில் கைவத்த கயவர்களையும், உடந்தையாக இருப்பவர்களையும் நிச்சயம் சிவபெருமான் தண்டிப்பார் என்கின்றனர் பக்தர்கள்.


Share it if you like it