நீங்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக ஸ்டாண்ட் எடுக்கும்போது, நாங்கள் பெரும்பான்மையினருக்கான ஆதரவு ஸ்டாண்ட் எடுப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கூறியிருக்கிறார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பேரா.சீனிவாசன், “தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஹிந்துக்களுக்கு எதிரான அரசியலை செய்து வருகிறார்கள். அதேபோல, சிறுபான்மையினருக்கு ஆதரவான அரசு என்று வெளிப்படையாக கூறிவருகிறார்கள். மேலும், ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் ஹிந்து கோயில்களை இடிக்கும் தி.மு.க. அரசு, மாற்ற மத கோயில்களை இடித்திருக்கிறதா? பாகுபாடு இல்லாத அரசாங்கமாக இருக்க வேண்டுமே தவிர, ஹிந்துக்களுக்கு எதிரான அரசாக இருப்பதால்தான் பிரச்னையே ஏற்படுகிறது.
இதே பா.ஜ.க.வைச் சேர்ந்த அமைச்சரோ, தலைவர்களோ சிறுபான்மையினருக்கு எதிராக இதுவரை பேசியிருக்கிறார்களா? நீங்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவான ஸ்டாண்ட் எடுக்கும்போது, நாங்கள் பெரும்பான்மையினருக்கு ஆதரவு ஸ்டாண்ட் எடுப்பதில் என்ன தவறு இருக்கிறது. மேலும், பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் தி.மு.க.வினர், ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்ல மறுப்பது ஏன்? ஆகவே, முதலில் நீங்க நிறுத்துங்க. நாங்களும் நிறுத்துகிறோம்” என்று தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியிருக்கிறார்.