அண்ணாமலையை இழக்கத் தயாரில்லை: பதாகையுடன் சிறுவன்… வைரலாகும் போட்டோ!

அண்ணாமலையை இழக்கத் தயாரில்லை: பதாகையுடன் சிறுவன்… வைரலாகும் போட்டோ!

Share it if you like it

வாழும் காமராஜர் அண்ணாமலையை இழக்க நான் தயாரில்லை, நீங்கள்? என்று பதாகையை ஏந்தியபடி சிறுவன் வெளியிட்டிருக்கும் போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு, சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இதன் காரணமாக, ஏராளமான இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்கள். அதேபோல, மாற்றுக் கட்சிகளில் இருக்கும் இளைஞர்களும் பா.ஜ.க.வில் சேர்ந்து வருகின்றனர். மேலும், தேசத்தின் மீது பற்று உள்ள இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் அண்ணாமலைக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இதனால், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பா.ஜ.க. பரந்து விரிந்து கிடக்கிறது.

இந்த நிலையில்தான், எங்களது மூதாதையர்கள் செய்த தவறால் காமராஜரை இழந்தோம். மீண்டும் ஒரு தவறை செய்து வாழும் காமராஜர் அண்ணாமலை இழக்க நான் தாயாரில்ல, நீங்கள்? என்று கேள்வி எழுப்பிய பதாகையுடன் சிறுவன் ஒருவன் போட்டோ வெளியிட்டிருக்கிறான். இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் சிறுவர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து மெய்சிலிர்க்கின்றனர்.


Share it if you like it