2022 – 23 நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. 5 சதவிகிதத்தை எட்டினாலே நாம் அதிர்ஷ்டசாலிகள் என்று ரகுராம் கூறியிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான தரவுகளின் படி ஜி.டி.பி. 7.2% ஆக பதிவாகி இருக்கிறது. இதனால், ரகுராம் ராஜனை வச்சு செய்து வருகின்றனர் பா.ஜ.க.வினர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராகவும், தலைமை பொருளாதார ஆலோசகருமாக இருந்தவர் ரகுராம் ராஜன். இவர், பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்திக்கு அளித்திருந்த பேட்டியில், 2022 – 23 நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. 5 சதவிகிதத்தை எட்டினாலே நாம் அதிர்ஷ்டசாலிகள் என்று ரகுராம் கூறியிருந்தார். இந்த சூழலில், மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் வெளியிடும் ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை வெளியிட்டிருக்கிறது.
இதில், 2022- 23-ம் நிதியாண்டின் இறுதி காலாண்டு முடிவுடன், மொத்த ஆண்டிற்குமான முடிவுகளை வெளியிட்டதில், ஜி.டி.பி. வளர்ச்சி 7.2 சதவிகிதமாக பதிவாகி இருக்கிறது. இது பொருளாதார நிபுணர்களின் கணிப்புகளை எல்லாம் முறியடித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2021- 22-ல் இந்திய ஜி.டி.பி.யின் மதிப்பு 234 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது தற்போது 272.4 லட்சம் கோடி ரூபாயாக வளர்ந்திருக்கிறது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 16.1 சதவிகித வளர்ச்சியாகும். உலக பொருளாதாரங்களில் இந்தளவு வளர்ச்சியை எந்த நாடும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ராகுல் காந்திக்கு ரகுராம் ராஜன் பேட்டியளித்த வீடியோவை எடுத்துப் போட்டு, வறுத்தெடுத்து வருகின்றனர். இவரு பெரிய பொருளாதார புலி என்றும், ஜேம்ஸ்பாண்ட் ராஜன் என்றும் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.