பாரதத்தை மீண்டும் சீண்டி பார்க்கும் கனடா – திருப்பி அடிக்க தயாராகும் பாரதத்தின் வெளியுறவுத் துறை

பாரதத்தை மீண்டும் சீண்டி பார்க்கும் கனடா – திருப்பி அடிக்க தயாராகும் பாரதத்தின் வெளியுறவுத் துறை

Share it if you like it

சமீபத்தில் பாரதத்தில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி போராட்டம் நடத்திவரும் காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிசார் கனடாவில் உயிரிழந்திருக்கிறார். தனிமனித குற்றமாக அரங்கேறிய இந்த சம்பவம் உலக அளவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் இடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இது போன்ற தொடர்ச்சியாக அடுத்தடுத்து காலிஸ்தான் பிரிவினைவாதிகள் ஆங்காங்கே கொல்லப்படுவதும் விபத்தில் மரணிப்பதும் சர்வதேச அளவில் பேசும் பொருள் ஆனது.

இந்நிலையில் கனடாவின் பிரதமர் ஐன்ஸ்டீன் ஃப்ரூடோ கனடாவின் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் பேசும்போது கனடாவில் வைத்து கனடா நாட்டின் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த ஒரு கனடாவின் தேசியர் ஹர்திக் சிங் நிசார் கொல்லப்பட்டிருக்கிறார். அவரின் கொலைக்கு பின்னணியாகவும் காரணமாகவும் இந்திய உளவுத்துறை இருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார். கனடாவின் மண்ணில் வைத்து ஒரு சதியை இந்திய உளவுத்துறை அரங்கேற்றுவதாகவும் வெளிப்படையாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதற்கு பாரதத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் உடனடியாக மறுப்பும் கண்டனமும் தெரிவித்திருக்கிறார். ஹர்தீப் சிங் நிசாரின் மரணம் கனடாவில் வைத்து தான் நிகழ்ந்திருக்கிறது. அதைப்பற்றிய முழுமையான விசாரணை ஆய்வுகளை கனடா நாடு மேற்கொள்ள முடியும். அதை விடுத்து பாரதத்தின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைப்பது ஏற்புடையதாக இல்லை. இதை உணராத கனடா நாட்டு பிரதமர் பேச்சு சிறுபிள்ளைத்தனமான பேச்சு என்றே கருதப்படும்.

பாரத வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் கனடாவும் இந்தியாவும் வரலாற்று ரீதியாக நல்ல நட்பு உணர்வோடு இருந்து வரும் நாடுகள். பாரதம் அதையே இப்போதும் விரும்புகிறது. அந்த வகையில் இருநாட்டு உறவுகளை சீர்குலைக்கும் வகையில் கனடாவின் நாடாளுமன்றத்தில் வைத்து பாரதத்தின் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை ஐன்ஸ்டீன் குருடோ முன்வைத்திருப்பதை கடுமையாக கண்டித்திருப்பதோடு கனடா பிரதமரின் இந்த குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்திருக்கிறார். மேலும் கனடா நாட்டை தளமாக கொண்டு இயங்கி வரும் பாரதத்தின் பிரிவினைவாத அமைப்புகள் அதன் கடந்த கால செயல்பாடுகள் பற்றி ஒரு பட்டியலையும் அவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் கனடா நாட்டு பிரதமருக்கு அனுப்பி வைத்து அது சம்பந்தமான விளக்கம் கேட்கவும் அதைப்பற்றிய கனடா அரசின் நடவடிக்கைகளை எதிர் நோக்கவும் பாரத வெளியுறவுத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது.

சமீபமாக கனடா பிரிட்டன் அமெரிக்கா ஐரோப்பா நாடுகள் இன்று தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தனி மனித விபத்துக்கள் கொலைகள் என்ற வகையில் பாரதத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கும் சர்வதேச அளவில் அவமதிப்பையும் ஏற்படுத்தி வந்த பலரும் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகிறார்கள் . இவை எல்லாம் அப்பட்டமான தனி மனித கொலைகள் அல்லது விபத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை எதுவும் பாரதத்தின் எல்லைக்கு உள் நடந்த நிகழ்வுகள் இல்லை. அந்த வகையில் இந்த நிகழ்வுகளின் முழு பின்னணி குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் குற்றவாளிகள் விசாரணை என்று எந்த ஒரு விஷயத்தையும் சம்பந்தப்பட்ட அந்த நாடுகள் உரிய வகையில் முன்னெடுக்க முடியும். அதற்குரிய விசாரணை அமைப்புகளும் அந்தந்த நாடுகளிலும் உண்டு.

அப்படி இருக்க கனடாவில் உயிரிழந்த ஹர்திக் சிங் நிஸாரின் மரணத்தை வைத்து பாரதத்தின் உளவுத்துறை மீது பகிரங்கமாக கனடா பிரதமர் குற்றச்சாட்டு வைத்திருப்பது சர்வதேச அளவில் பாரதத்தின் கௌரவத்திற்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. காரணம் கனடாவின் பிரதமர் இதைப் பற்றிய எந்த ஒரு முன் விளக்கத்தையோ அல்லது இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது இதில் பாரதத்தின் உளவுத்துறை சம்பந்தப்பட்டு இருப்பதற்கான ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று எந்த ஒரு ஆவண பரிமாற்றமோ குற்றச்சாட்டுகளையும் அல்லது கடித பரிமாற்றமோ நேரடியாக பாரத வெளியுறவுத் துறைக்கோ பாரதத்தின் பிரதமருக்கோ இதுவரையில் நடந்ததாக செய்தி இல்லை . ஆனால் எடுத்த எடுப்பில் நேரடியாக கனடாவின் பாராளுமன்றத்தில் வைத்து கனடாவின் குடியுரிமை பெற்ற கன்னட தேசிய குடிமகன் சொந்த மண்ணில் கொல்லப்பட்டிருக்கிறார். அதன் பின்ணணியில் பாரதத்தின் உளவுத்துறை இருக்கிறது என்று பேசி இருப்பது ஒரு பிரதமர் பதவியில் இருப்பவருக்கு அழகல்ல. மேலும் இதன் மூலம் அவர் சர்வதேச அரங்கில் பாரதத்திற்கு திட்டமிட்ட ஒரு தலைகுனிவை ஏற்படுத்த முனைகிறார் என்பது தெளிவாகிறது.

கனடாவின் பிரதமர் குறிப்பிடுவது போல் ஹர்தீப்சிங் நிசார் கனடா நாட்டு குடிமகன் எனில் அவரின் செயல்பாடுகள் பாரதத்தின் உள்நாட்டு அமைதிக்கும் பாதுகாப்பும் குந்தகம் விளைவித்திருப்பதை கடந்த காலங்களில் கனடாவின் உளவுத்துறை வெளியுறவுத்துறை அறியாமலா இருந்திருக்கும்? கனடாவில் இருந்து கொண்டு கனடா நாட்டு தேசிய குடிம குடியுரிமையோடு வாழ்ந்து வரும் ஒரு நபர் பாரதத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பை நிர்வகிப்பதும் அதன் மூலம் பயங்கரவாத செயல்களை பாரதத்தில் அரங்கேற்றி இருப்பதும் இதுவரையில் கனடா நாட்டு உளவுத்துறை அறியாமலா நடந்தது? .

இவை யாவும் இதுவரையில் கனடா உளவுத்துறை அறியாத தகவல்கள் என்றால் அந்த நாட்டின் உளவுத்துறை செயல் இழந்ததாக அர்த்தம். அந்த உளவுத்துறையின் அடிப்படையில் பிரதமர் பேசும் இந்த விஷயங்கள் ஒரு பொருட்டாகவே கருதப்பட மாட்டாது. அந்த வகையில் இது கனடா நாட்டு பிரதமர் பாரதத்தின் மீது வைக்கும் அவதூறு பிரச்சாரமாகவே பார்க்கப்படும். இதற்காக பாரதத்திடம் அவரின் பேச்சுக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லை மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் கனடாவின் உளவுத்துறைக்கு தெரிந்து தான் நடைபெற்றது எனில் இந்த ஹர்திப் சிங் நிசாரின் மரணத்திற்கும் அது சம்பந்தமான காலிஸ்தான் பயங்கரவாத பின்னணி நிகழ்வுகளுக்கும் கனடா நாட்டு பிரதமரும் அவரின் உளவுத்துறையும் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் . அந்த வகையிலும் பாரதத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கும் தேசிய இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்களுக்கு துணை நின்றதற்காக அவர் சர்வதேச அரங்கில் பாரதத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இது தொடர்பான அமைப்புகள் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு இனி கனடா மண்ணில் இடம் இல்லை என்று என்பதை அதிகாரபூர்வமாக பிரகடனம் செய்ய வேண்டும்.எஞ்சி இருக்கும் பயங்கரவாத அமைப்புகள் தலைவர்கள் மீது கனடா நாட்டு சட்டப்படி உரிய நடவடிக்கைகளை அவர் எடுக்க வேண்டும். இரண்டையும் செய்ய தவறும் பட்சத்தில் கனடா நாடும் அதன் பிரதமரும் பாகிஸ்தானை போல பாரதத்திற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் அமைப்புகளுக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் முழுமையான தளமாக கனடாவை இயங்க அனுமதிக்கிறார்கள். அதன் மூலம் கனடாவின் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடம் அளித்து ஆதரவளிக்கிறார்கள் என்றே அர்த்தம். இன்று பாரதத்திற்கு எதிராக இவர்கள் செய்யும் செயல்கள் நாளை உலகின் வேறு எந்த ஒரு நாட்டிற்கும் எதிராக திரும்பாது என்பதற்கு என்ன ஒரு உத்தரவாதம்? அந்த வகையில் உலக அளவில் பயங்கரவாதத்தை உரம் போட்டு வளர்த்து அதன் மூலம் சர்வதேச அமைதிக்கும் நலனுக்கும் குந்தகம் விளைவிக்கும் ஒரு நாடாகவே கனடா நாட்டை பார்க்க முடியும். அந்த வகையில் பாரதத்தின் எதிரி நாடாக பாகிஸ்தானை போல உலக அரங்கில் தனிமைப்படுவதற்கு 100% தகுதியான நாடாகவே இனி கனடா பார்க்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் இந்திராவின் ஆட்சி காலத்தில் பொற்கோவில் சம்பவம் தொடர்பாக ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற ஒரு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏராளமான காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் பொதுமக்கள் இராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள்.இதை தொடர்ந்து சில மாதங்களில் பிரதமர் இந்திரா காந்தி தனது மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

கனடாவில் வாழ்ந்து வரும் சீக்கியர்கள் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையை கருப்பு தினமாக அனுஷ்டித்து வருகிறார்கள் . அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நினைவு தினம் கனடாவில் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் ஒன்று கூடி நடத்திய ஒரு பேரணியில் ஒரு வாகன கண்காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது . அதில் இந்திரா காந்தி தனது மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியை காட்சிப்படுத்தும் விதமான ஒரு வாகன கண்காட்சி இருந்தது. உலக அளவில் பெரும் இது உலக அரங்கில் விமர்சனங்களையும் பாரதத்திலிருந்து கடும் அதிருப்தியும் கனடாவிற்கு பெற்றுக் கொடுத்தது.

பாரதத்தின் சொந்த மண்ணில் அவரது சொந்த வீடு அலுவலக வளாகத்தில் தனது மெய் காவலர்களால் ஒரு பிரதமர் சுட்டுக் கொல்லப்படுகிறார். எனில் அது தேசத்திற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தல்? பயங்கரவாதத்தின் எத்தனை பெரிய கோர முகமாக இருந்திருக்க வேண்டும்? இந்த நிகழ்வை ஏதோ ஒரு பெருமிதமான நிகழ்வாக சித்தரித்து ஒரு கண்காட்சி வாகனம் தனது மண்ணில் அரங்கேற்றப்படுவதை கனடா பிரதமர் எப்படி அனுமதித்தார் ? இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற இருப்பதும் அதில் இந்திராவின் கொலை சம்பவத்தை பிரதிபலிக்கும் வகையில் வாகன அணிவகுப்பு நடைபெற இருப்பதும் கனடா நாட்டு உளவுத்துறைக்கு தெரியாமலா இருந்திருக்கும்? தெரிந்தே காவல்துறை அனுமதி பாதுகாப்போடு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கும் எனில் இந்திராவின் கொலையை முன் நின்று நடத்திய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை கனடா முழுமையாக ஆதரிக்கிறது என்றே அர்த்தம் .

அந்த வகையில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திரா கொலையை அவர்களின்வெற்றி கொண்டாட்டமாக இதுவரையில் அவர்கள் கொண்டாடி வருவதையும் முழு ஆதரவோடும் பாதுகாப்போடும் கனடா நாடு அனுமதித்து வருகிறது என்று அர்த்தம். அந்த தைரியத்தில் தான் இந்திராவின் கொலையையே பட்டவர்த்தனமாக காட்சிப்படுத்தி தங்களின் வெற்றியை காலிஸ்தான் பயங்கரவாதிகள் பறைசாற்றி இருக்கிறார்கள். அதையும் முன்கூட்டி அறியவோ தடுக்கவோ கனடா நாட்டிற்கு துணிவில்லை அல்லது விருப்பமில்லை என்று அர்த்தம்.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு தேசத்தின் பிரதமர் அவரது சொந்த நாட்டில் மெய்க்காவலர்களால் கொல்லப்படுவது சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டின் ஆட்சியாளர்கள் மத்தியிலும் அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு முகமைகள் உளவுத்துறை மட்டத்திலும் எவ்வளவு பெரிய தாக்கத்தை அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கக்கூடும்? இதை கனடா நாட்டு பிரதமர் அறியாதவரா? இன்று வரை காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திராவின் கொலையை மையப்படுத்தி நடத்திய கண்காட்சிக்கும் அந்த பேரணிக்கு அனுமதி கொடுத்த விவகாரம் சம்பந்தமாக இதுவரையில் அவர் ஒரு வருத்தம் தெரிவிக்கவில்லை. அது சம்பந்தமான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட கனடா நாட்டு அதிகாரிகள் மீது அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சம்பந்தமாக இதுவரையில் கனடா நாட்டு நீதிமன்றத்தில் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்ட தகவலும் இல்லை. ஆனால் இன்று அதே காலிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் கனடா நாட்டில் உயிரிழக்கும் போது இது இந்திய உளவுத்துறையின் கைவரிசை தான் என்று அபாண்டமாக குற்றச்சாட்டை கனடா நாட்டு பிரதமர் முன்வைப்பதன் மூலம் கடந்த காலங்களைப் போல தொடர்ச்சியாக பாரதத்தின் மீது வன்மம் கொண்டு அவர் செயல்படுதன் சாட்சியமே.

பாரதத்தில் வேளாண் திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் விவசாயிகள் போர்வையில் பல ஆயிரக்கணக்கான பேர் புது தில்லியை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தை நடத்தி வந்தார்கள் . பல மாதங்கள் நீடித்த இந்த போராட்டம் பெரும் கலவரங்கள் வன்முறைகளையும் நிகழ்த்தியது. உச்சகட்டமாக குடியரசு தினத்தின் கொண்டாட்டத்தையே சீர்குலைக்கும் வகையில் தேசிய இறையாண்மையை அவமதிக்கும் வகையில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த ஒருவன் செங்கோட்டையில் பறந்திருந்த பாரதத்தின் தேசிய கொடியை அவமதித்து காலிஸ்தான் பிரிவினை கொடியை ஏற்றி அராஜகத்தில் ஈடுபட்டார். இன்று வரை கனடா நாடு அதை கண்டிக்கவோ அதற்கு காரணமானவர்களை கனடா நாட்டில் உள் நுழைய தடையோ விதிக்கவில்லை.

ஆனால் அதே காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சார்ந்த ஒருவன் கனடாவில் மரணித்ததற்கு இந்திய உளவுத்துறையை குறிவைத்து கனடா பிரதமர் குற்றச்சாட்டு வைக்கிறார் எனில் அந்த பயங்கரவாதி இறந்ததில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பை காட்டிலும் கனடா நாட்டிற்கு தனிப்பட்ட முறையில் இழப்போ அதிருப்தியோ நிலவுவதாகவே கருதப்படும். அந்த வகையில் பாரதத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கும் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையிலான பிரிவினைவாத பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வந்த ஒரு காலிஸ்தான் பிரிவினைவாதையின் மரணம் கனடா நாட்டு பிரதமருக்கு இவ்வளவு வருத்தம் விளைவிக்கும் எனில் பாரதத்தை நட்பு நாடு என்று சொல்வதும் ஆனால் உண்மையில் பாரதத்தின் உள்நாட்டு அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிப்பதையுமே கனடா நாடு விரும்புவதாக கருதப்பட வேண்டும். அதை செய்பவர்கள் மரணிக்கும் போது அது கனடா நாட்டு பிரதமரை வருத்தத்தில் ஆழ்த்தி பாரதத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கும் அளவில் கொண்டு வந்து நிறுத்தும் எனில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பிற்கும் அதன் பிரிவினைவாதிகளுக்கும் வெறும் அகதிகள் போர்வையில் அரசியல் அடைக்கலம் மட்டும் கனடா நாடு கொடுத்து வரவில்லை . அதற்கும் மேலாக பாரதத்திற்கு எதிரான பிரிவினைவாத பயங்கரவாத அமைப்புகளுக்கு எல்லாம் பின்னணியில் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் கூட கனடா நாடு கொடுத்து வருவதாகவே அர்த்தம்.

வேளாண் தீர்க்க சட்டத்திற்கு எதிரான விவசாய போராட்டத்திற்கு கனடா நாட்டு பிரதமர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த போது பாரதம் தனது எதிர்ப்புகளை கண்டனங்களை வெளிப்படையாக பதிவு செய்தது. அதனை தொடர்ந்து சில மாதங்களில் கனடாவில் கரும்பு உற்பத்தி விவசாயிகள் மற்றும் அது சம்பந்தமான போக்குவரத்து பணியில் ஈடுபடும் கனரக ஓட்டுனர்கள் கனடா நாட்டுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த போது அந்தப் போராட்டத்திற்கும் காரணமாக இந்திய உளவுத்துறையை சந்தேகித்து கனடா நாட்டு பத்திரிகைகள் எழுதத் தொடங்கியது. குற்றம் உள்ளவன் நெஞ்சம் குறுகுறுக்கத்தான் செய்யும் என்று பாரதம் அமைதியாக ஒதுங்கிப் போனது . ஆனால் இன்று ஹர்தீப் சிங் நிஜாரின் மரணத்திற்கு கனடா நாட்டு பிரதமரை வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் வைக்கும் குற்றச்சாட்டை அவ்விதமாக எளிதாக கடந்து போக முடியாது.

ஒரு நாட்டுப் பிரதமர் தனது நாடாளுமன்றத்தில் வைக்கும் ஒரு குற்றச்சாட்டிற்கு பொறுப்பான பதிலை ஆவணபூர்வமாக வணங்காவிடில் அது சர்வதேச அரங்கில் பாரதத்திற்கு பெரும் அதிருப்தியையும் அவ நம்பிக்கையையும் தேடித் தரும். அந்த வகையில் உரிய பதிலடி பாரதத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் வழங்கி இருப்பது பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் இதுவரையில் கனடா நாட்டு பிரதமர் மீதும் அல்லது அந்த நாட்டின் உளவுத்துறை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் மீது பாரதம் வெளிப்படையான குற்றச்சாட்டுகளையோ சந்தேகங்களையும் எழுப்பியது இல்லை. ஆனால் இப்போது முதல் அடியாக பாரதத்தின் உளவுத்துறை மீது கனடா நாட்டு பிரதமர் வெளிப்படையாக தனது குற்றச்சாட்டை முன் வைத்ததன் மூலம் இனி அடுத்தடுத்த அதிரடியை பாரதமும் தொடரும். முதல் அடியாக கனடா நாட்டை மையமாக செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் அதன் தலைவர்கள் அவர்களின் வாழ்விடம் வியாபார வர்த்தக தொடர்புகள் அத்தனை தகவல்களையும் பட்டியலிட்டு அதை கனடா நாட்டு பிரதமருக்கு ஆதாரப்பூர்வமாக அனுப்பி வைத்திருக்கிறது. இனி அவரின் முடிவுகள் செயல்பாடுகள் எப்படி இருக்கும் ? என்பதை பொறுத்து அடுத்தடுத்த நகர்வுகளை பாரதத்தின் வெளியுறவுத்துறை கையில் எடுக்கும்.

இந்திரா காந்தி கொலை நேரடி பங்கு வகித்த காலிஸ்தான் பயங்கரவாத பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் ராஜீவ் காந்தி கொலையில் நேரடி பங்கு வகித்த விடுதலைப் புலிகளின் அமைப்பு என்று பாரதத்தின் தேசிய இறையாண்மைக்கும் தேசத்தின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் அத்தனை அமைப்புகளுக்கும் அவர்களின் பயங்கரவாத செயல்களுக்கும் இன்று வரையில் தளமாக முழு பின்னணியில் ஆதரவாக இருந்து வருவது கனடா நாடு தான் . ஒருவேளை அங்கிருக்கும் குடிமக்கள் தான் தங்களின் தனிப்பட்ட விருப்பில் இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்கள் எனில் அவர்களை கண்டறிந்து அவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கனடா நிச்சயம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அது அவர்களின் தார்மீக கடமை. ஆனால் அப்படி எந்த ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை. மாறாக இந்திராவின் கொலையாளிகள் தொடங்கி ராஜீவ்காந்தி கொலையாளிகளின் விடுதலைவரையில் பெரும் பணம் சர்வதேச அளவில் இன்று வரை புழங்கி வருகிறது. அதன் பின்னணிகளை இந்திய உளவுத்துறை கண்டறிந்து அதன் ஆதாரங்களை சர்வதேச அரங்கில் முன் வைத்தால் கனடா நாட்டின் உண்மையான முகம் அப்போது வெளிவரும். அதை கூடிய விரைவில் பாரதத்தின் வெளியுறவுத் துறை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

பல காலமாக பயங்கரவாதத்தின் பிடியில் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் தயவு இருந்து வந்த பாரதத்தின் ராஜ்யப் பரிபாலனம் இன்று முழுவதுமாக சுயராஜ்யமாக நிமிர்ந்து நிற்பதில் கனடா நாட்டிற்கு ஜீரணிக்க முடியாத வேதனை இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் கனடா பிரதமரின் இந்த வெளிப்படையான பாரத அவமதிப்பு. சந்திராயன் வெற்றி தொடர்ச்சியான வலுவான பொருளாதாரம் கட்டமைப்புகள் கொரோனாவிற்கான நோய் தடுப்பு முறைகள் அடுத்தடுத்து பாதுகாப்புத்துறை உள்ளிட்ட விஷயங்களை பாரதத்தின் தொடர் வெற்றிகள். சர்வதேச அரங்கில் ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி பாரதம் ஒரு பாதுகாப்பான தேசம் என்பதை உணர்த்தியது. சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தை சரித்து உலக அளவில் அனைத்து நாடுகளும் பயன்பெறும் வகையிலான பாரத அரேபிய ஆப்பிரிக்க ஐரோப்ப நாடுகளை இணைக்கும் தரைவழி பொருளாதாரம் போக்குவரத்து சாலை கட்டுமானம் என்று தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் பாரதத்தின் நலனுக்கும் அதை கடந்து சர்வதேச நாடுகளின் நலனுக்கும் பாரதம் தொடர்ந்து முன்மொழிந்து வருகிறது . அந்த வகையில் பாரதத்தின் திட்டங்களும் அதன் செயல்பாடுகளும் தானும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்க வேண்டும் என்ற உயர்ந்த இலக்கில் நடை போடுகிறது . அதே நேரத்தில் தனது உள்நாட்டு பாதுகாப்பு தேசிய இறையாண்மை சர்வதேச அரங்கிலான தனது தேசத்தின் கௌரவம் என்ற விஷயத்தில் துளியும் சமரசம் இன்றி கடுமை காட்டி வருகிறது. இதனால் நேரடியான பாதிப்புக்கு உள்ளாவது இதுநாள் வரையில் பாரதத்தின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவித்த பயங்கரவாத அமைப்புகளும் அதன் பின்னணியில் இருந்து ஆதரவு தெரிவித்து வரும் சர்வதேச நாடுகளும் தான். அந்த வகையில் பாரதத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவித்த காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் இழப்பு அதை இதுநாள் வரையில் ஆதரித்த கனடா நாட்டிற்கு பேரிழப்பாகவும் அவரின் மரணத்திற்கு நீதி வேண்டி இன்று கனடா நாட்டு பிரதமர் பாரதத்தின் மீது குற்றச்சாட்டு வைப்பதிலும் வந்து நிற்கிறது. அந்த வகையில் சுதந்திர பாரதத்தின் அத்தனை சீர்கேடுகளுக்கும் சீரழிவுகளுக்கும் பங்களிப்பை வழங்கிய காலிஸ்தான் பயங்கரவாத பிரிவினைவாத அமைப்புகளுக்கு கனடா நாடு முழு ஆதரவு அளித்து வந்தது அம்பலம் ஆகிறது.

ஆனால் தற்போது பாரதத்தை ஆண்டு கொண்டிருப்பவர்கள் இந்திரா காந்தி ராஜீவ் காந்தி போல உலக நாடுகளை கண்மூடித்தனமாக நம்பி உயிரிழக்கக்கூடிய அப்பாவிகள் இல்லை. ஒவ்வொரு நாடுகளின் உண்மை வரலாறு அவர்களின் பின்னணி அவர்களின் உளவுத்துறை நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணிக்கும் அசகாய சூரர்கள். கடந்த காலங்களில் பாரதத்தின் இழப்புகளை எல்லாம் கணக்கில் வைத்து ஒவ்வொன்றாக சரி செய்து வரும் உண்மையான பாரதியர்கள் . ஆயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்ட தேசம் என்ற இருமாப்பில் இருந்த பிரிட்டனையே எதிர்கொள்பவர்களுக்கு கனடா போன்ற நாடுகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல . அப்படி இருக்க வலிய வந்து வம்பு இழுத்தால் வீண் அவதூறு பேசினால் அவர்களின் நிலை என்னவாகும்? என்பதையும் எதிர்காலத்தில் கனடா நாடும் அதன் பிரதமரும் உணர்ந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் உரிய வகையில் பாரதத்தின் வெளியுறவுத் துறையால் கண்காணிக்கப்பட்டு இதன் முழு பின்னணியும் அதை பின்னணியில் இருக்கும் நாடுகளின் உளவுத்துறை உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகளையும் விரைவில் வெளிக்கொணரும். அப்போது பாகிஸ்தானின் வரிசையில் பல்வேறு நாடுகள் பாரதத்திற்கு எதிரான பயங்கரவாத நாடுகளாக இடம்பெறும். அதில் கனடாவும் முதலிடம் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மற்றொரு புறம் பாரதத்தின் மீது அவதூறு மலிவான விமர்சனங்களை முன்வைத்து அதன் காரணமாக பாரதத்தின் எதிர் நடவடிக்கைகளால் பதவி இழந்த மலேசியாவின் அதிபர். பதிலடி வாங்கிக் கொண்டு இருக்கும் இடம் தெரியாமல் மௌனம் காக்கும் துருக்கி ஈரான் வரிசையில் கூடிய சீக்கிரம் கனடாவும் சேரும். ஆனால் சர்வதேச அளவில் பாரதத்தின் மூலம் கனடா வாங்கும் பதிலடியும் கனடாவின் பிரதமர் எதிர்கொள்ள போகும் ராஜிய நிகழ்வுகளும் இனி பாரதத்தின் மீது அபாண்டமான அவதூறுகளை பரப்ப நினைக்கும் எந்த ஒரு நாட்டிற்கும் பாரதத்தின் உள்நாட்டு அமைதியை பாதுகாப்பை சீர்குலைக்க நினைக்கும் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பிற்கும் விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கையாகவே இருக்கும்.


Share it if you like it