பா.ஜ.க. பிரமுகர் கொலை: நக்சலைட்டுகள் அட்டூழியம்!

பா.ஜ.க. பிரமுகர் கொலை: நக்சலைட்டுகள் அட்டூழியம்!

Share it if you like it

சத்தீஸ்கரில் பட்டப்பகலில் குடும்பத்தினர் கண்முன்னே பா.ஜ.க. பிரமுகர், நக்சலைட்டுகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் உசூர் பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்ட கக்கேம். கடந்த 30 ஆம்டுகளாக பா.ஜ.க.வில் இருந்துவந்த இவர், கடந்த 15 வருடங்களாக மண்டல பா.ஜ.க. தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த சூழலில், தனது மைத்துனியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக நீலகண்ட கக்கேம் தனது சொந்த கிராமமான ஆவப்பள்ளிக்கு கடந்த 5-ம் தேதி சென்றிருந்தார். அப்போது, திடீரென தடை செய்யப்பட்ட நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர் சிலர், நீலகண்ட கக்கேம் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது, உறவினர்கள் கண்முன்னேயே கோடரி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களால் நீலகண்ட கக்கேமை வெட்டிக் கொலை செய்தனர். இதில், சம்பவ இடத்திலேயே நீலகண்ட கக்கேம் இறந்து விட்டார்.

இதுபற்றி தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், கொல்லப்பட்ட நீலகண்ட கக்கேம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏ.சி.பி. சந்திரகாந்த் கவர்னா கூறுகையில், ஆவப்பள்ளி கிராமத்துக்கு சுமார் 150 ஆயுதமேந்திய நக்சல்கள் வந்திருக்கிறார்கள். இவர்களில் 3 பேர் நீலகண்ட கக்கேம் வீட்டிற்குச் சென்று தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இவர்கள் எதற்காக பா.ஜ.க. தலைவர் நீலகண்ட கக்கேமை கொலை செய்தார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார். பட்டப்பகலில் ஊர்மக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Share it if you like it