மேடையில் திடீரென ஆவேசமான திருமாவளவன், மைக்கை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மே 17 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசுகையில், “ஆரம்ப காலம் முதலே தமிழீழ விடுதலைக்காக அறப்போர் நடத்தி வரும் இயக்கம் வி.சி.க.தான். ராஜபக்சே இனப்படுகொலை செய்தவர்” என்று ஆவேசமாகப் பேசினார். தொடர்ந்து, தமிழீழ விடுதலை தொடர்பாக மேலும் பல கருத்துக்களை பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென திருமாவளவனின் மைக் வேலை செய்யவில்லை.
இதையடுத்து, உடனடியாக அவருக்கு மாற்று மைக் வழங்கப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த மைக்கும் வேலை செய்யவில்லை. எனவே, மைக் செட் அமைப்பாளரை போல, ஹலோ மைக் டெஸ்டிங்.. ஹலோ.. என்று மைக்கை டெஸ்ட் செய்த திருமாவளவன், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து ஆவேமடைந்தார். பிறகு, வேலை செய்யாத மைக்கை திருமாவளவன் வீசி எறிந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமாவளவனின் இச்செயல் வி.சி.க. நிர்வாகிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தினாலும், ஒரு பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற இங்கீதம் தெரியாவர் என்று பொதுமக்கள் முகம் சுளிக்கவே செய்தனர்.